எழுச்சி ,புரட்சி போராட்டம் உன்னை தேடி வருவதில்லை அதை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். நேற்று இன்றில்லை, இன்றும் நேற்றில்லை நாளை வேறு,வாழ்ந்து பார், வாழ்க்கையை வென்றாலும், தோற்றாலும் ஒன்றுதான்!
'இந்த உலகத்தில் எந்த நாடெல்லாம் அடிமையாக்கி கிடக்கின்றதோ அந்த நாடெல்லாம் என் தாய் நாடு' என்ற கூட்டும் வரலாறு தெரியாத ,படிக்காத சமூகத்தை இன்னொரு சமூகம் கட்டி ஆழ காத்தக் கொண்டே இருக்கும்.
We have no right to believe that freedom can be won without struggle.(Che Guevara)
'நம் சுதந்திர போராட்டம் கஷ்டமின்றி கிடைக்கும் என்று நம்புவதில் எமக்கு உரிமை இல்லை'
அன்று இஸ்லாமிய ராஜ்ஜியங்கள்(Islamic Kingdom),கைப்பற்றப்பட்டு நெஞ்சை நிமித்தி கொண்டு குடி ஏறிய சாமான்ய சமூகம் இன்று ஒரு அகதியாக குடியேற்றப்பட்டு ,அகதியாகவே துரத்தி விடப்படுகின்ற ஒரு துர்ப்பபாக்கிய நிலையை காண்கின்றோம்.
வரலாறு தொலைவதில்லை தொலைவிக்கப்படுகின்றன நபிமுஹம்மது ஸல் அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற பொது இவ்வாறு கூறினார்கள்,
اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد" "
'இறைவா மக்கள் மீதுள்ள அன்பை போல அல்லது அதனை விட அதிகமாக மதீனா மீது அன்பை ஏட்படுத்துவாயாக'
اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد" "
'இறைவா மக்கள் மீதுள்ள அன்பை போல அல்லது அதனை விட அதிகமாக மதீனா மீது அன்பை ஏட்படுத்துவாயாக'
ஆக ஒரு பிரதேசத்தத்தின்,நாட்டின் பற்று ஆள் மனதில் இருப்பது மட்டுமன்றி எங்களது வெளிப்பாடுகளையும் காட்ட வேண்டும் என்பதையும் இந்த ஹதீத் தெளிவுபடுத்துகின்ற நிலையை காண்கின்றோம்.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு (Documentary) மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது, இதன் புவியியல் (Geographical Map) அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு,இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய (Diplomatic) முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது, இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது, இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.
சோல்பரி அரசியலமைப்பு (Soulbury Constitution in Sri lanka) இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்,பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது.
ஆக பெரும் நெருக்கடியான,பன் மொழி (Multicultural) இனம் சார்ந்த கரடு,முரடான பாதைகளை தண்டி பெற்ற இந்த சுதந்திரம் வெறும் கொடிகளால் பறக்க விடப்பட்டு காற்றடிக்கும் பக்கம் பறக்கும் காற்றடியாக பார்ப்பதை இட்டு என்ன சொல்வது !
திருகோணமலையும் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரசித்தி பெற்ற ஓர் பதிப்பிடம் என்பதையும் நாம் மறக்கலாகாது அனால் இன்று ஒருங்கிணைக்கப்பட்ட கிண்ணியா சுதந்திர தினம் வெறும் மழலை செல்வங்களால் காற்றடிகளாக பறக்க விட்ட தேசிய கொடிகளை கண்டபோது வெட்கித்துப் போனேன்.
ஒரு இலட்சத்துக்கும் மேலான கிண்ணியா பிரஜைகள் இருந்தும் ,அதிலும் எத்தனையோ அரச,நிருவாகங்கள் கொண்ட ,தொழில் சார் அரச உத்தியோகத்தர்கள் இருந்தும் ஏன் ஒரு திட்டமிடலின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படவில்லை,அரச ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை என்பதும் மற்றொரு குற்றச்சாட்டு ,அரச தொழில்,அரச சம்பளம் வேண்டும் என்று கூக்குரலிடும் உங்கள் அரச பற்று எங்கே போனது.
உலமா சபை ,சூரா சபை,பள்ளி சம்மேளனம்,கிராமிய அபிவிருத்தி சங்கம்,நூற்றுக்கணக்கில் உள்ள நிறுவனங்கள், நூற்றுக் கணக்கில் மதரசாக்கள்,சமூக நலன் விரும்பிகள்,பேஸ்புக் போராளிகள் ,சமூக அக்கறை என்று சொல்லித் திரியும் சக்கரைகள் எல்லாம் எங்கே முக்காடு போட்டுக் ஒழிந்து கொண்டு இருந்தனர்.
'உம்மத்துன் வசத்தா'( امة وسطا –Midlevel Community) நடு நிலை சமூகம்,சாமான்ய சமூகம் என்று லேபல் ஒட்டிக் கொண்டு எழுச்சி,புரட்சி பேசுவதில் நம் இஸ்லாமிய சமூகம் வல்லவர்கள் என்பதையும் இது பறை சாற்றுகின்றன ,நாம் பல்லின சமூகத்துடன் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படயில் கட்டாயமாக வருடத்தில் ஓர் நாளேனும் எமது தேச, நாட்டு பற்றை காட்ட வேண்டி இருக்கின்ற சூழ்நிலையில் உள்ளோம் என்பதையும் மறந்து விட வேண்டாம் .
எம்மில் எத்தனையோ ஜாயாக்களையும்,சித்தி லெப்பைகளையும்,ஒராபி பாஷா க்களையும் குழி தோண்டி புதைத்து விட்டீர்கள் போலும் ,சக வாழ்வு,சம வாழ்வு என்று அங்கங்கே ஒலி கேட்டன ஆனால் ஒளி ஏற்றப்படவில்லை இன்னும்...!
‘’Liberty is not the power of doing what we like, but the right to do what we ough’