நேற்றையதினம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர் கட்சி கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வவுனியா மைந்தன் ஜெயதிலகவும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்
தற்போது நாட்டில் நிலவும் நல்லிணக்கம் சில இனவாத சிந்தனையுடன் செயல்படுபவர்களால் சீர்குலைந்து காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை நாம் வடக்கு மக்களிடையோ சிறுபான்மை மக்களிடையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த விடக்கூடாது
இலங்கை நாட்டில் உள்ள சில தேரர்கள் இனவாதப் போக்கினை கொண்டு செயல்படுகின்றனர் இதற்க்கு சில அரசியல்வாதிகளும் சேர்ந்து நாட்டில் குழப்பத்தினை மேற்கொண்டு வருகின்றனர் உண்மையான பெளத்த தர்மத்தனை பின்பற்றாத இவர்கள் பெளத்த மதத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள் எந்த ஒரு மதமும் இனவாதத்தை தூண்டவில்லை மனிதர்களிடையே பிரிவினை ஏற்படுத்துமாறு கூறவில்லை அனால் இன்று அவைகள் நடைபெறுகின்றது
அதுமட்டுமல்லாது கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஒரு சிறந்த அமைச்சர் இனபேதம்,மதபேதம்,மொழிபேதம் எவையும் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுகிறார் சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தினையும் கொண்டு செயட்படுகின்றார் ஆனால் இந்த இனவாதிகள் இவரை அளிக்க நினைக்கின்றார்கள் அதற்க்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் இனவாதத்தினை தூண்டுவோர்களுக்கு எதிராக போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோம்" என தேரர்கள் தெரிவித்தனர்