கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கு நியாயமானதாகவும் நிரந்தரமானாதான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் தலைமையில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் இதன் போது ஆளநரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது தற்போது பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை உயர்த்துதல் தொடர்பான தீர்மானமும் ஆளுனரிடம் வலியுறுத்துக் கூறப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு எதிர்வரும் ஏப்ரலுக்குள் பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஆளுனரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி வருடாவருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டதாரிகளை உள்வாங்குவாற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியம் இதன் போது கிழக்கு முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் விரைவுல் இது தொடர்பான பிரேரணையொன்றை மாகாண சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனூடாகா பட்டதாரிகளுக்கு நிரந்தர விடிவு காலத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் கூறினார்