Top News

வன்னிக்கான தேசியப்பட்டியலை ஹுனைசுக்கு வழங்க முஸ்தீபு



முசலியூர் ஹசன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை மன்னாருக்கான உத்தியோக விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

முன்னாள் எம் பி சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்கின் அழைப்பின் பேரின் மன்னாருக்கு வருகை தரவுள்ள அமைச்சர் ஹக்கீம், நீண்ட சர்ச்சைக்குள்ளாகியுள்ள தேசியப்பட்டியலை மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்காக இரத்தம் சிந்திய தூய்மையான போராளி ஹுனைஸ் பாரூக்கிற்கு வழங்குவதற்கான அறிவிப்பை மக்கள் முன் வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

மேற்படி தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீம் வழங்குவதற்கு இடையூறுகள் காணப்பட்டால் அவரை முசலி மண்ணிலே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் மு கா போராளிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரயீஸ், முத்தலிபாபா பாரூக்குக்கு அழைப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post