Top News

முஸ்லீம் பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் அதிகரிக்கப்படல் வேண்டும்



மட்டக்களப்பிலுள்ள முஸ்லீம்கள்மாவட்ட சனத்தொகையில் சுமார் 32 க்கும் அதிகாமான வீதத்திலுள்ள போதும்,நிலப்பரப்பில் 1.7 வீதமான அளவிலேயே வாழ்கின்றனர். இது மிக மோசமானதும்பின்னடைவானதுமான ஒரு நிலைமையாகும். இது குறித்து தீர்வு எட்டப்படாவிட்டால்எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என காஸ்ட்ரோ (CASDRO) அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் தெரிவித்தார். 

நேற்று ( 23.02.2017)காலை 10 .00  மணியளவில் கல்முனை லீ மேரடின் ஹோட்டலில் இடம்பெற்றகிழக்கு மாகாண முஸ்லிம்களின் சமகால பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் “அம்பாறை மாவட்டத்தில் வட்டமடுநுரைச்சோலை விவகாரங்கள் பெரிதும் அக்கறையுடன் நோக்கப்படவேண்டிய விடயங்களாகும். அதேவேளை மட்டக்களப்பில் முஸ்லீம்களுக்குள்ள பாரிய சிக்கலான நிலத்தேவையினை சிக்கலின்றி விடுவிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திலுள்ள அனைத்து மட்ட தலைமைகளுக்கும் உள்ளது. 

அத்துடன் மக்களின் சனத்தொகைக்கு ஏற்றவாறு கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கப்படல் வேண்டும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் 2013 ன் படி 27 வீதமாக இருந்தும் 49 கிராம சேவையாளர் பிரிவுகளே உள்ளன. இது அளவில் 15 வீதமாகும்.  இது தொடர்பிலாக  தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மிகவும் பொறுப்புக்கள் உள்ளது. அவர்கள் மிக நீதமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்புடன் இருக்கின்றார்கள். தமது மக்களின் உரிமைகளை காப்பாற்ற நினைப்பவர்கள் தமது சம இனத்தின் தேவைகளை புரிந்து கொள்ள முன்வரல் வேண்டும். இதே கண்னோட்டத்துடனேயே வாழைச்சேனை முஸ்லீம் பிரதேச சபையையும் நோக்க வேண்டும்.

இது குறித்து நாம் கிழக்கு முதலமைச்சரூடாகநல்லாட்சியின் தலைவர்களுக்கு எமது வேண்டுகோளினை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் முஸ்லீம்களின் காணி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றது. இதற்காக நாம் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களை நன்றிகளுடன் நினைவு கூறுகின்றோம், அத்துடன் மட்டக்களப்பு முஸ்லீம்களின் தேவைகள் குறித்தும், கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” எனவும் கூறினார்.
Previous Post Next Post