ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரங்களை அறிய விண்ணப்பம் சமர்ப்பிப்பு

NEWS


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் சமர்ப்பி க்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனமான ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பினால் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன தொடர்பிலான தகவல்களும் கோரப்ப ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 3ம் திகதி தகவல்  அறிந்து கொள்ளும் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top