Top News

அன்வர் கியூபா நாட்டின் உயரிஸ்தானிகரை சந்தித்தார்



எம்.ரீ. ஹைதர் அலி

கியூபா நாட்டின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜூஆனா எலேனா மற்றும்உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆலோசகர் ராவுல் கேரி ஜாரியோ ஆகியோரை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து 2017.02.13ஆந்திகதி - திங்கட்கிழமை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் விஷேடமாக திருகோணலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த நிலையில் மீள்குடியேற முடியாத நிலைமையில் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், மீன மற்றும் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்பன தொடர்பாக இச்சந்திப்பின்போது உயர்ஸ்தானிகரிடம் கலந்துரையாடினார்.

மேலும் இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றினையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்ததுடன் கிழக்கு மாகாணத்திற்கு உயர்ஸ்தானிகர் விஜயமொன்றினை மேற்கொள்ள வேண்டுமென்று மாகாண சபை உறுப்பினர் விடுத்த அழைப்பினையேற்று மிக விரைவில் வருகை தருவதாகவும் உயரிஸ்தானிகர் இதன்போது உறுதியளித்தார்.

Previous Post Next Post