தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆனால் நகர அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் முயற்சித்தால் முழுமையான காணியொன்றை பெறலாம் என அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17 பேரும் கையொப்பமிட்டு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். அந்த மகஜரில், தற்போதைய தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் கழிவறைகள் மற்றும் கட்டிடங்கள் உட்பட 41.49பேர்ச் காணியில் அமைந்துள்ளதாகவும், வாகனத் தரிப்பிட வசதியைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போழுது உள்ள பள்ளிவாசல் 20 பேர்ச் காலையிலேயே அமைந்துள்ளதால், அந்தளவு காணியே வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்குவது தொடர்பில் பௌத்த தேரர் எதிர்ப்பு வெளியிட்டபோதும், பள்ளிவாசல் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதால் அவசியம் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்