எம்.வை.ஏ.அஸீஸ் |
சப்றின்
புதிய அரசியலமைப்புத் திருத்தங்களின்போது வடகிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அர்த்தமுள்ள, கௌரவமான ஆலோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற வற்புறுத்தல் உள்நாட்டிலும், மேற்குலகத்தாலும், இந்தியாவாலும், புலம்பெயர்ந்த சக்தியாலும் இறுக்கமாகிக் கொண்டு வருகின்றது என்று மக்கள் ஜனநாய முண்ணனியின் செயலாளர் நாயகம் எம்.வை.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்ற சமகால அரசியல் நிகழ்வுகள் சம்மந்தமாக கலந்துரையாடும் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில் - துரதிஷ்டவசமாக வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தின் நிரந்தர அமைதி, பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தக்கூடியதான எதுவித தீர்வு ஆலோசனைகளும் ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை முன்வைக்கப்படாமல் இருப்பது இந்த நாட்டின் வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தை அநாதரவானவர்களாகவும், அநாதைகளாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றன.
வடகிழக்கு முஸ்லிம்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இதுவரை எந்த விதமான காத்திரமான தீர்வு முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும். இந்த மூன்று முஸ்லிம்களின் காங்கிரஸ்களும் உள்வீட்டு நாற்றங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் காங்கிரஸுக்கு எதிரான அதன் செயலாளர் நாயகத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, நீதிமன்றத்தில் தொங்கி நிற்கிறது. அதனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் காங்கிரஸ் தனது சின்னமான மயில் சின்னத்தில் போட்டியிடமுடியாமல் போய் முஸ்லிம் பகுதிகளில் புத்த சிலைகளை எழுப்பிவரும் தயா கமகேயின் யானைச் சின்னத்திலேயே தேர்தல் கேட்க வேண்டி வரும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்தவுக்கு வாக்களித்ததில் பாராளுமன்றத் தேர்தலில் மண் கௌவிய தேசிய காங்கிரஸ் ஈனவும் முடியாமல் நக்கவும் முடியாமல், தன்னிடமிருந்த மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுத்தீனையும் முஸ்லிம் காங்கிரசுக்கு பறிகொடுத்துவிட்டு பேந்தப் பேந்தப் முழித்துக்கொண்டிருக்கிறது. அதன் எதிர்காலம் நூலறுந்த பட்டமாகவே தெரிகிறது. எனினும் மஹிந்தவின் கிழக்குப் பிரிவினை வாதத்தையே தெய்வ வாக்காக நம்பி வேறு மார்க்கம் புரியாமல் வெதும்பிக் கொண்டிருக்கிறது.
வட கிழக்கு முஸ்லிம்களின் முதலாவதும், முதன்மையானதுமான கட்சியாகிய முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலியினதும் இடைநிறுத்தப்பட்டுள்ள இறுதித் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தினதும் உள்வீட்டு பிரச்சினைகளில் தன்னை மூழ்கடித்து இதுகாலவரை எதுவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை. ஆயினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது பட்டுப்போகப் பார்க்கும் மரச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காக அரைமனதோடு ஹசன் அலிக்கு செயலாளர் நாயகத்தின் பழைய பொறுப்புகள் அனைத்தையும் பழிபாவத்திற்கு அஞ்சாது கொடுக்க ஏனோ தானோ என்று இணங்கியுள்ளது. இருந்தபோதும் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் சேகுதாவுத் வெளியிடப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் பதுமராக சீ.டீக்களை முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் அடங்கலாக அனைவரும் மிகுந்த ஆவலோடு நாவைச் சப்பிக்கொண்டு ரசம்தட்டி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். அதன் அதிரடித் தாக்கங்கள் ஒரேயடியாய் உதாசீனப்படுத்தக்கூடியவையல்ல என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் உள்ளூர உணர்ந்துள்ளது. அத்தோடு காங்கிரஸின் தாருஸ்ஸலாம் கணக்கு வழக்குகள் உட்பட பல்வேறு விதமான கையாடல்கள் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதி மன்றம்வரை போகக்கூடிய சாத்தியம் நிறையவே உள்ளது. அதனால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் பலஹீனப் பரீட்சை பகிரங்கத்திற்கு வந்துவிடும்.
கலக்கல் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தோடு மக்கள் காங்கிரஸ் ரிசாட்டும், தேசிய காங்கிரஸ் அதாவும் அப்பழுக்கில்லாத அந்நியோன்னிய, ஆத்மார்த்த அன்பையும் உறவையும் வளர்த்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த சாம்பார்க் கூட்டின் தாக்கம் தனிப்பாலாணமாகப் போயுள்ள முஸ்லிம் காங்கிரசை தலைகுனிய வைக்க தாராளமாக இடமுண்டு.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் இந்த முக்கூட்டுக்காரர்களுக்கு கிரீடம் சூட்டுவதைப் போல, சும்மா ஆடுகிற பேய்க்கு கொட்டு முழக்கம் அடித்தாற்போல ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸத்தீனையும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகள் திரை மறைவில் நடந்து வருகின்றன. முஸ்லிம்களின் தலைமைத்துவத்திற்கான போட்டியை முதன்மைப்படுத்தியுள்ள ரிசாட்டின் மீது சற்றாயினும் அனுதாபமுள்ளவர் சேகு இஸ்ஸத்தீன் என்பது தெரிந்த விடயம்தான். எனவே இரண்டு சேகுகளும் ரிசாட்டும், அதாவும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசின் முதுகெலும்பை முறித்து சூப்புப்போட்டுக் குடிப்பது சிரம, சாத்தியமாக இருக்காது.
ஆயினும் ஸ்தாபகத் தவிசாளரை முஸ்லிம் காங்கிரசில் இருந்து மறைந்த தலைவர் அஸ்ரப் வெளியேற்றியது அப்பட்டமான அநியாயத்திலுள்ளது என்பது அன்றிலிருந்து இன்றுவரை அறிந்தவர்களின் கருத்தாகும். சேகுவின் ஷபதுவா' காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியில் இன்றுவரை எவரும் நிரந்தரமாக நீடிக்கவில்லை என்பதுவும் எல்லாரும் முறித்துக்கொண்டோ அல்லது முறிந்துகொண்டோ பிரிந்தார்கள் என்பதும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியின் வரலாறு ஆகும். பதுவா வாங்கிச் சாகப்போறான் சந்தேகமில்லே!'' என்று ஸ்தாபகத் தவிசாளர் சேகு முணுமுணுப்பது இன்றும் கேட்கிறது. ஆயினும் மறைந்த தலைவர் அஸ்ரப் மரிப்பதற்கு முன் சேகுவுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதாவிடம் அனுப்பி வைத்ததாகவும் அதனை இதுவரை அதா சேகுவிடம் கொடுக்கவுமில்லை, சொன்னதும் கிடையாது என்ற கதையை டீயெஸ். மஜீத் இன்றும் சொல்கிறார். அத்தோடு சேகுவை மீண்டும் காங்கிரசுக்குள் சேர்க்க வேண்டுமென்று சம்மாந்துறையில் மர்ஹும் அஸ்ரப் ஆற்றிய மயக்க இறுதியுரை இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் இருக்கிறது. சேகுவை முஸ்லிம் காங்கிரசில் உள்வாக்க வேண்டும் என்ற ஒரு போக்கு தலைவர் அமைச்சரிடமும் பிரதித் தலைவர் முதலமைச்சரிடமும் ஸ்தாபகச் செயலாளர் அட்டாளைச்சேனையாரிடமும் இருக்கவே செய்கிறது. எனினும் கதிர்காமத்துக் கந்தனுக்கு காவடி எடுத்து சம்மந்தப்போடியார் அங்கப்பிரதட்சணம் செய்து பெற்ற தவத்திருகுமாரன் இந்த சேகுவை விட்டு அந்த சேகுவை உள்வாங்குவது இருமலை விட்டு குக்கலை உள்வாங்குவதுபோன்றது என்று பயமுறுத்தி வரும் செய்தியும் வெளிவராமல் இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ், சேகு நம்பர் வண்ணை எதிராணிக்கு விட்டுக்கொடுக்குமானால் அது தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போடும் மடமைத் தனமாகவே இருக்கும். அதே நேரம் முஸ்லிம் காங்கிரசுக்குள் சேகுவை சேர்த்துக்கொள்ள சேகு என்ன விதிமுறைகளை வெளிப்படுத்துவார் என்பதும் தெரிய வில்லை. ஆயினும் தேசியப் பட்டியலை அவர் பெரிதாக எதிர்பார்க்கமாட்டார் என்பது எமது நம்பிக்கை. அமைச்சர் பதவியை ஐந்தாறு மாதங்களுக்கு முன்னரேயே இராஜினாமா செய்து வெளியேறிய சேகுவுக்கு யார் யாருக்கெல்லாமோ தலையில் அடித்துச் சத்தியம் செய்து தருவதாகச் சொன்ன தேசியப் பட்டியல் ஒரு சாபமாகவே இருக்கும்.
ஆயினும் தான் எந்தத் தவிசாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ அந்தத் தரத்திலுள்ள தவிசாளர் பதவியை அவர் எதிர்பார்ப்பார். அத்தோடு வடகிழக்கு முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுதான் அவர் முஸ்லிம் காங்கிரசில் இ';டத்தோடு இணைவதை உற்சாகப்படுத்தும் ஒரு விடயமாக இருக்கும். என்பது உறுதி.
பழைய பவுசுகளைப் பாராட்டிக் கொண்டிராமல் வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தின் நிரந்தர அமைதிப் பாதுகாப்பையும் சமமான அதிகாரப் பரவலாக்கத்தையும் முற்படுத்தி சிந்தித்து வரும் சேகுவை முஸ்லிம் காங்கிரஸ் இழப்பது பசீர் சேகுதாவுத்தை சதங்கை கட்டி ஆட வைக்கும் என்பது திண்ணமாகும். புதிய அரசியலமைப்புத் திருத்தங்களின்போது வடகிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அர்த்தமுள்ள, கௌரவமான ஆலோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற வற்புறுத்தல் உள்நாட்டிலும், மேற்குலகத்தாலும், இந்தியாவாலும், புலம்பெயர்ந்த சக்தியாலும் இறுக்கமாகிக் கொண்டு வருகின்றது. துரதிஷ்டவசமாக வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தின் நிரந்தர அமைதி, பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தக்கூடியதான எதுவித தீர்வு ஆலோசனைகளும் ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை முன்வைக்கப்படாமல் இருப்பது இந்த நாட்டின் வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தை அநாதரவானவர் களாகவும், அநாதைகளாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றன.
வடகிழக்கு முஸ்லிம்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இதுவரை எந்த விதமான காத்திரமான தீர்வு முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும். இந்த மூன்று முஸ்லிம்களின் காங்கிரஸ்களும் உள்வீட்டு நாற்றங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் காங்கிரஸுக்கு எதிரான அதன் செயலாளர் நாயகத்தினால் தாக்கல் செய்யப்பட்டள்ள வழக்கு, நீதிமன்றத்தில் தொங்கி நிற்கிறது. அதனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் காங்கிரஸ் தனது சின்னமான மயில் சின்னத்தில் போட்டியிடமுடியாமல் போய் முஸ்லிம் பகுதிகளில் புத்த சிலைகளை எழுப்பிவரும் தயா கமகேயின் யானைச் சின்னத்திலேயே தேர்தல் கேட்க வேண்டி வரும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்தவுக்கு வாக்களித்ததில் பாராளுமன்றத் தேர்தலில் மண் கௌவிய தேசிய காங்கிரஸ் ஈனவும் முடியாமல் நக்கவும் முடியாமல், தன்னிடமிருந்த மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுத்தீனையும் முஸ்லிம் காங்கிரசுக்கு பறிகொடுத்துவிட்டு பேந்தப் பேந்தப் முழித்துக்கொண்டிருக்கிறது. அதன் எதிர்காலம் நூலறுந்த பட்டமாகவே தெரிகிறது. எனினும் மஹிந்தவின் கிழக்குப் பிரிவினை வாதத்தையே தெய்வ வாக்காக நம்பி வேறு மார்க்கம் புரியாமல் வெதும்பிக் கொண்டிருக்கிறது.
வட கிழக்கு முஸ்லிம்களின் முதலாவதும், முதன்மையானதுமான கட்சியாகிய முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலியினதும் இடைநிறுத்தப்பட்டுள்ள இறுதித் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தினதும் உள்வீட்டு பிரச்சினைகளில் தன்னை மூழ்கடித்து இதுகாலவரை எதுவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை. ஆயினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது பட்டுப்போகப் பார்க்கும் மரச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காக அரைமனதோடு ஹசனலிக்கு செயலாளர் நாயகத்தின் பழைய பொறுப்புகள் அனைத்தையும் பழிபாவத்திற்கு அஞ்சாது கொடுக்க ஏனோ தானோ என்று இணங்கியுள்ளது.
இருந்தபோதும் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் சேகுதாவுத் வெளியிடப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் பதுமராக சீ.டீக்களை முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் அடங்கலாக அனைவரும் மிகுந்த ஆவலோடு நாவைச் சப்பிக்கொண்டு ரசம்தட்டி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். அதன் அதிரடித் தாக்கங்கள் ஒரேயடியாய் உதாசீனப்படுத்தக்கூடியவையல்ல என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் உள்ளூர உணர்ந்துள்ளது. அத்தோடு காங்கிரஸின் தாருஸ் ஸலாம் கணக்கு வழக்குகள் உட்பட பல்வேறு விதமான கையாடல்கள் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதி மன்றம்வரை போகக்கூடிய சாத்தியம் நிறையவே உள்ளது. அதனால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் பலஹீனப் பரீட்சை பகிரங்கத்திற்கு வந்துவிடும். கலக்கல் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தோடு மக்கள் காங்கிரஸ் ரிசாட்டும், தேசிய காங்கிரஸ் அதாவும் அப்பழுக்கில்லாத அந்நியோன்னிய, ஆத்மார்த்த அன்பையும் உறவையும் வளர்த்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த சாம்பார்க் கூட்டின் தாக்கம் தனிப்பாலாணமாகப் போயுள்ள முஸ்லிம் காங்கிரசை தலைகுனிய வைக்க தாராளமாக இடமுண்டு.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் இந்த முக்கூட்டுக்காரர்களுக்கு கிரிடம் சூட்டுவதைப் போல, சும்மா ஆடுகிற பேய்க்கு கொட்டு முழக்கம் அடித்தாற்போல ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸத்தீனையும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகள் திரை மறைவில் நடந்து வருகின்றன. முஸ்லிம்களின் தலைமைத்துவத்திற்கான போட்டியை முதன்மைப்படுத்தியுள்ள ரிசாட்டின் மீது சற்றாயினும் அனுதாபமுள்ளவர் சேகு இஸ்ஸத்தீன் என்பது தெரிந்த விடயம்தான். எனவே இரண்டு சேகுகளும் ரிசாட்டும், அதாவும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசின் முகுகெழும்பை முறித்து சூப்புப்போட்டுக் குடிப்பது சிரம, சாத்தியமாக இருக்காது. ஆயினும் ஸ்தாபகத் தவிசாளரை முஸ்லிம் காங்கிரசில் இருந்து மறைந்த தலைவர் அஸ்ரப் வெளியேற்றியது அப்பட்டமான அநியாயத்திலுள்ளது என்பது அன்றிலிருந்து இன்றுவரை அறிந்தவர்களின் கருத்தாகும். சேகுவின் ஷபதுவா' காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியில் இன்றுவரை எவரும் நிரந்தரமாக நீடிக்கவில்லை என்பதுவும் எல்லாரும் முறித்துக்கொண்டோ அல்லது முறிந்துகொண்டோ பிரிந்தார்கள் என்பதும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியின் வரலாறு ஆகும்.
பதுவா வாங்கிச் சாகப்போறான் சந்தேகமில்லே!'' என்று ஸ்தாபகத் தவிசாளர் சேகு முணுமுணுப்பது இன்றும் கேட்கிறது. ஆயினும் மறைந்த தலைவர் அஸ்ரப் மரிப்பதற்கு முன் சேகுவுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதாவிடம் அனுப்பி வைத்ததாகவும் அதனை இதுவரை அதா சேகுவிடம் கொடுக்கவுமில்லை, சொன்னதும் கிடையாது என்ற கதையை டீயெஸ். மஜீத் இன்றும் சொல்கிறார். அத்தோடு சேகுவை மீண்டும் காங்கிரசுக்குள் சேர்க்க வேண்டுமென்று சம்மாந்துறையில் மர்ஹும் அஸ்ரப் ஆற்றிய மயக்க இறுதியுரை இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் இருக்கிறது. சேகுவை முஸ்லிம் காங்கிரசில் உள்வாக்க வேண்டும் என்ற ஒரு போக்கு தலைவர் அமைச்சரிடமும் பிரதித் தலைவர் முதலமைச்சரிடமும் ஸ்தாபகச் செயலாளர் அட்டாளைச்சேனையாரிடமும் இருக்கவே செய்கிறது. எனினும் கதிர்காமத்துக் கந்தனுக்கு காவடி எடுத்து சம்மந்தப்போடியார் அங்கப்பிரதட்சணம் செய்து பெற்ற தவத்திருகுமாரன் இந்த சேகுவை விட்டு அந்த சேகுவை உள்வாங்குவது இருமலை விட்டு குக்கலை உள்வாங்குவதுபோன்றது என்று பயமுறுத்தி வரும் செய்தியும் வெளிவராமல் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ், சேகு நம்பர் வண்ணை எதிராணிக்கு விட்டுக்கொடுக்குமானால் அது தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போடும் மடமைத் தனமாகவே இருக்கும். அதே நேரம் முஸ்லிம் காங்கிரசுக்குள் சேகுவை சேர்த்துக்கொள்ள சேகு என்ன விதிமுறைகளை வெளிப்படுத்துவார் என்பதும் தெரிய வில்லை. ஆயினும் தேசியப் பட்டியலை அவர் பெரிதாக எதிர்பார்க்கமாட்டார் என்பது எமது நம்பிக்கை. அமைச்சர் பதவியை ஐந்தாறு மாதங்களுக்கு முன்னரேயே இராஜினாமா செய்து வெளியேறிய சேகுவுக்கு யார் யாருக்கெல்லாமோ தலையில் அடித்துச் சத்தியம் செய்து தருவதாகச் சொன்ன தேசியப் பட்டியல் ஒரு சாபமாகவே இருக்கும்.ஆயினும் தான் எந்தத் தவிசாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ அந்தத் தரத்திலுள்ள தவிசாளர் பதவியை அவர் எதிர்பார்ப்பார். அத்தோடு வடகிழக்கு முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுதான் அவர் முஸ்லிம் காங்கிரசில் இஷ்டத்தோடு இணைவதை உற்சாகப்படுத்தும் ஒரு விடயமாக இருக்கும். என்பது உறுதி. பழைய பவுசுகளைப் பாராட்டிக் கொண்டிராமல் வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தின் நிரந்தர அமைதிப் பாதுகாப்பையும் சமமான அதிகாரப் பரவலாக்கத்தையும் முற்படுத்தி சிந்தித்து வரும் சேகுவை முஸ்லிம் காங்கிரஸ் இழப்பது பசீர் சேகுதாவுத்தை சதங்கை கட்டி ஆட வைக்கும் என்பது திண்ணமாகும்.