லண்டனில் இருந்து பஹ்மி
இலங்கை அரசியல் வரலாற்றில் தேசியக் கட்சிகளில் இருந்து விலகி,தமது தனித்துவத்தையும்,இருப்பையும்,பாதுகாப்பையும் நிலைநாட்ட உருவானதே SLMC.இதற்கு முன்னர் சில முஸ்லீம் அமைப்புகள் செயற்பட்டாலும் முஸ்லீம்களின் விடுதலைக்கான அரசியல் போராட்டம் SLMC கட்சியினூடாகவே ஆரம்பமானது. வடகிழக்கு மற்றும் வெளிமாவட்டத்தில் நடுத்தர மற்றும் படித்த முஸ்லீம் தலமைகள் பதவிகளுக்காகவும்,புகழுக்காகவும் அரசியல் நடாத்திய வரலாற்றை மாற்றி,அரசியலை சாதாரண பாமரனுக்கும் சொந்தமாக்கியது SLMC. உண்மையில் இலங்கை முஸ்லீம்களின் நீண்ட வரலாற்றில் SLMC உருவாக்கமே அரசியல் அதிகாரத்துக்கான அத்திவாரத்தை இட்டது.குறிப்பாக மர்ஹூம் அஸ்ரபின் இருசதாப்த காலமுற்போக்கு செயற்பாடுகள் முஸ்லீம்களுக்கு பொற்காலாமாகும்.முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பலம் தேசியக்கட்சிகளுக்கு அவசியமானதும் கட்டாயமானதும் என்ற வரலாற்று சாதனையை அரங்கேற்றினார்.அடிமைகளாக இருந்த வடகிழக்கு முஸ்லீம் சமூகத்தை தேசியக்கட்சிகளுக்கு பேரம்பேசும் சமூகமாக மாற்றினார்.அதுமட்டுமல்ல இலங்கையில் முஸ்லீம் சமூகம் இருப்பதை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டினார்.மேலும் விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட படுகொலை,இனச்சுத்திகரிப்புகளுக்கு எதிராக முஸ்லீம் சமூகத்தை தைரியமும்,ஆளுமையும் உள்ளதாக மாற்றினார்.முஸ்லீம்களின் விட்டுக் கொடுப்பு இன்றி தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்பதை பலமுறை கூறியதோடு..அதனை நிரூபித்துக் காட்டிச் சென்றார். இந்த நிலையில் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் கட்சியும் சமூகமும் பலகோணங்களுக்கு இடமாறியது.குறிப்பாக போட்டியாகிய தலமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் சுயநலமிக்க தலமைத்துவ செயற்பாடுகளால் SLMC தனது கோட்பாடுகளில் இருந்து விலகத் தொடங்கியது.பதவி மோகம் மற்றும் வியாபாரச் சிந்தனை உடையவர்களால் சமூகத்திற்கான கட்சியை வெகுநாட்களுக்கு வழிநடாத்த முடியவில்லை.அஷ்ரப் காலத்தில் கட்சி பலமுரண்பாடுகளைச் சந்தித்தாலும் ஹகீமின் காலத்தில் முரண்பாடுகளைவிட பிளவுகளையே சந்தித்தது.குறிப்பாக ஆளுமைமிக்க மற்றும் ஆரம்பப் போராளிகள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர்.கிழக்கு மக்களுக்காக உருவான கட்சியை அஷ்ரப் தனது ஆளுமையால் நுஆ என்ற கட்சியினூடாக தேசியமயமாக்கினார்.ஆனால் ஹகீமோ தேசியத்திலும் இல்லை,கிழக்கிலும் இல்லை என்ற நிலைக்கு இட்டுச் செல்வதாக பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.கடந்தகாலங்களில் பலர் கட்சியை விட்டுப் பிரிந்தபோது அதாவுள்ளா மற்றும் றிசாத் தலமையில் கட்சிகள்உருவாகின.இதனைவிட ஹிஸ்புள்ளா,SSP மஜீது போன்ற பல தலைவர்கள் தேசியக்கட்சிகளுடன் சங்கமமானார்கள்.அஷ்ரப் காலத்தில் SLMCஐத் தவிர கிழக்கில் எந்த முஸ்லீம் தலமையும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது.ஆனால் அம்பாறையில் தனித்துக் கேட்டால் அல்லது 3 பேருக்கு மேல் கட்சி வேட்பாளர்களை நிறுத்தினால் கிழக்கில் ஓரிரு ஆசனம் கூட கேள்விக்குறியாக மாற்றியதே ஹகீமின் சாதனை.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் இன்று சந்தரப்பவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தேசியக் கட்சிகளில் சவாரி செய்யாமல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலைக்கு கட்சியை ஹகீம் வழிநடாத்தியுள்ளது வரலாற்றுத் தவறும் பொறுப்புக் கூறவேண்டியதுமாகும். இந்த நிலையில் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூகத்தையும் தலமைத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.அதிலும் பஷீர் மற்றும் ஹஸனலி வெளியேற்றம்,தலமைத்துவம் மற்றும் கட்சித் தலமையகம் மீதான ஆதாரமிக்க குற்றச்சாட்டுகளால் SLMC மீதான அதிருப்தி கடந்தகாலங்களை விட தற்போது புதிய பரிணாமங்களை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் கட்சிப் போராளிகள் இன்னும் கட்சிமீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர்.இந்த நம்பிக்கை தான் இதுவரை கட்சியையும் தலமையையும் பாதுகாத்து வருகிறது.கட்சியை விட்டு வெறியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலர் மீது நியாயமான விமர்சனமும் உள்ளது.இவர்கள் வெளியேறியதை விடகட்சிக்குள் இருந்து போராடி இருக்கலாம்.ஏனெனில் இது சமூகத்திற்கான கட்சி.இலட்சியங்களாலும்,இரத்தங்களாலும் உருவான கட்சி.தலமைத்துவம் என்பது எங்களை வழிநடாத்தவே. தமிழ் கட்சிகள் பதவிகளுக்கு அப்பால் சமூகத்தின் இலட்சியத்துக்காக வரலாற்றில் அரசியல் நடாத்துபவை.இவர்களிடையே கொள்கை வேறுபாடுகள் இருந்டாலும்,இவர்களின் இறுதி இலக்கும் பயணமும் ஒன்றுதான்.இந்த நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்புக்குள் இலகுவாக இவர்களால் ஒற்றுமைப்பட முடிந்தது.இதன் மூலம் தமிழ் சமூகத்தை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதிர்க்கட்சியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளனர்.இந் நிலையில் தற்போது முஸ்லீம் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் SLMCஜத் தவிர்ந்த பலமுஸ்லீம் தலமைகள் ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.தலமைத்துவப் பதவி,அமைச்சுப் பதவிகளுக்காக தனித்துவமாகவும் சுயமாகவும் செயற்பட்டவர்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் பலசவால்களை முகம்கொடுக்க நேரிடும்.SLMC தலமைக்கு எதிரானவர்களால் ஒற்றுமைப்படுவதில் பலசிக்கல் உள்ளது.ஹகீமுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒற்றுமையாக செயற்படுவார்களென எதிர்பார்க்க முடியாது.இருந்தும் மிகநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய அமைப்பிற்கான தேவை உணரப்பட்டுள்ளதோடு,அதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படுகிறது.அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லீம் கூட்டமைப்பிற்கான அவசியம்::1)இணைத் தலமைத்துவம்:்:அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் ஹகீமின் ஒருதலைப்பட்ச தலமைத்துவம் கட்சிக்கட்டுக் கோப்பை நிலைநாட்டத் தவறியுள்ளது.குறிப்பாக தனக்கு தலையாட்டும் பொம்மைகளை வைத்து சமூகத்தின் இலட்சியத்துக்காக போராடமுடியாது.இந்த நிலையில் கட்சியில் இணைத் தலமைத்துவம் அல்லது அதிகரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும்.பேரியல்காலத்தில் இணைத்தலமைத்துவம் தோல்விகண்டது.இதனை ஒத்தவகையில் மாவட்டத்தில் தலமைத்துவம் அந்தமாவட்ட தலைவர்களிடம் பகிரந்தளிக்கப்பட வேண்டும்.தனிநபர் அதிகாரம் அல்லது சர்வாதிகாரத் தலமைத்துவம் சமூகத்திற்கு அவசியமற்றதாகும்.2)வடகிழக்கு முஸ்லீம்களின் வரலாற்று ரீதியான காணி,பாதுகாப்பு,இடம்பெயர்வு,மீள்கட்டுமானம்,தொழில் மற்றும் இதர பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.இந்த நிலையில் கிழக்கின் சகல முஸ்லீம் தலைவர்களையும் விலக்கிவைத்து ஹகீமால் கத்தம் மட்டுமே ஓதமுடியும்.இந்த நிலையில் எதிர்கால இனப்பிரச்சனை மற்றும் அரசியலமைப்பு தீர்வுகளில்,,வரலாற்றை அறிந்த,பாதிப்புகளை உணர்ந்த கிழக்குமாகாண தலமைகளின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அவசியமாகும். 3)தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள தமிழ்தேசியவாதம் முஸ்லீம்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் இரட்டைப் போக்கை கடைப்படிக்கிறது.இந்தநிலையில் முஸறலீம் தலமைகளின் ஒற்றமையும்,ஒருதலைப்பட்ச கொள்கையும் அவசியமாகும்.4)அண்மைக்கால சிங்கள இனவாதம் மற்றும் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் போன்றவற்றால் சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.இந்த நிலையில் கிழக்கில் பிரதேச ரீதியாக முஸ்லீம் தலமைகள் பிரிந்து இருப்பதைவிட பொதுஉடன்பாட்டுக்கு வருவது காலத்தின் தேவையாகும்.5)அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைகளில் மேற்கொள்ளயுள்ள மாற்றங்கள் எமது பிரதிநிதித்துவத்தை பாதிக்காதவகையில் அமைய,எமது தலமைகள் ஒன்றுபட வேண்டும்.6)வடகிழக்கில் ஏற்கனவே SLMCகு எதிரான தலமைகள் பரலவான ஆதரவும்,அதிகாரமும் உடையவர்களாக உள்ளனர்.இவர்களின் செல்வாக்கை ஒன்றுபடுத்தி SLMCயும் சேர்த்து சமூகத்தின் பலத்தை மிகைப்படுத்த கூட்டமைப்பு தேவையாகும்.இருந்தாலும் ஹகீமின் தனிநபர் மற்றும் சர்வாதிகார தலமைத்துவப் போக்கு இவர்களுடன் இணைவதற்கான சாத்தியத்தை கேள்விக்குறியாக்கும்.தற்போது பிரிந்து நிற்கின்ற தலமைகள் எல்லாம் பதவிக்காக சோரம் போகின்றவர்கள்.இதனைவிட இவர்கள் சமூகத்திற்காக பேசுவதைவிட சுயநலமிக்க செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர்.ஏனெனில் தேர்தலில் வெற்றி பெறவும்,அமைச்சுப் பதவிக்காக மட்டுமே இவர்களால் ஒன்றுபட முடியும்.பதவிகள் கிடைக்காவிடில் இவர்கள் இன்னும் பலநூறு துண்டுகளாக பிரிவார்கள்.ஆகவே இவர்கள் முதலில் எந்தச் சந்தரப்பத்திலும் அமைச்சு மற்றும் பதவிகளைப் பெறமாட்டோம் என்று சத்தியம் எடுக்க வேண்டும்.கட்சியின் தலமை கூட்டாகவும்,மசூறாவின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும்.ஏனெனில் முஸ்லீம் தலமைகளை அமைப்பு ரீதியில் ஒன்றுபட வைக்கலாம்.பணம்,பதவி மற்றும் அதிகாரம் என்பன வருகின்ற போது துரோகிகளும்,குள்ளநரிகளும் உருமாற்றம் பெறுகிறது.ஆதலால் முஸ்லீம் கூட்டமைப்பு காலத்தின் தேவையான ஒன்றாகும்.இதனை திட்டமிட்ட அடிப்படையில் ,வெளிப்படையானதும் திறந்ததுமான பேச்சுக்களை நடாத்தி,மசூறா அடிப்படையில் உருவாக்க வேண்டும்.மாறாக சமூகத்தின் பிரச்சனையை பூதாகரமாக்கவும்,முஸ்லீம்களின் அரசியலை புதைகுழியில் இடுவதுமாக இருக்க கூடாது.