அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பின்னவீனத்துவ ஊடகமாக வளர்ச்சியடைந்துள்ள சமூக வலைத்தளங்கள் உலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, DIGITAL MEDIA என்று சொல்லப்படும் இச் சமூகவலைகள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை செய்து வரும் நிலையில் யாரும் எவரும் செய்தியாளர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. புகைப்படம், விடியோ பதிவேற்றுதல் மட்டுமல்லாது நேரடி ஒலி ஒளிபரப்புகளையும் செய்யக்கூடி வழிவகையில் அமையப்பெற்றுள்ளது இந்த சமூகவலைத்தளம். இந்த புதிய ஊடகப்போக்கினையும் சரியான ஊடகவியலையும் அடுத்த சந்ததிக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. இதற்காக செயலமர்வுகளை பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த சமூகவலையிலும் புதிய தொழில்நுட்ப வசதியிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுகிறது, அது மாத்திரமின்றி எங்கள் இருப்புக்களை ஆவணப்படுத்துவதிலும் மந்த நிலை காணப்படுகிறது, ஊடகவியல் இன்று உடைந்த பல்ப்போன்று ஆகியிருக்கும் நிலையில் இதனை போக்கி எம்மவர்களை நவீன யுகத்திற்கு தயார்படுத்தி அடுத்த சந்ததிக்கு சரியான ஊடகவியலை சொல்லிக்கொடுத்து ஊடகப்பணியை சரியாக செய்யவேண்டும். இதற்கு அனைத்து முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அமைப்புகளும் முன்வரவேண்டும்.
இ்நதப் பணியை செவ்வனே செய்ய கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் ஒன்றை ஸ்தாபித்துள்ளோம், சில தினங்களில் அறிமுக நிகழ்வு ஒன்றையும் செயரமர்வு ஒன்றையும் செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது, எமது சம்மேளனம் செயலமர்வுகள், அறிவுறுத்தல் கருத்தரங்குகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பவற்றையும் செய்ய திட்டமிட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ். Facebook Page: https://www.facebook. com/EasternMuslimJournalists/