Top News

பகினிகஹவெல பழைய முஹிதீன் பள்ளிவாசல்



சிறாஜ் மசூர்
இன்றும் எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சான்று.
மொனறாகலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வசிக்கும் ஊர் பகினிகஹவெல ஆகும். மொனறாகலை-பிபிலை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வூர், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெல்லஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தது.
இவ்வூரிலிருக்கும் பழைய முஹிதீன் பள்ளிவாசல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது இற்றைக்கு 400-600 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் என்கின்றனர்.
கல்லும் சுண்ணாம்பும் பாணியும் கலந்த சாந்தின் மூலம் இது கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் அரேபிய மார்க்க அறிஞர் ஒருவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து இதை நிர்மாணித்ததாகவும் கூறுகின்றனர்.
நான் அறிந்த வரை, நம் மத்தியில் எஞ்சியிருக்கும் மிகத் தொன்மையான பள்ளிவாசல் இதுவேயாகும். பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் 1000 வருடங்கள் பழமையானது என்றாலும், அதன் பழைய கட்டடத்தை இன்று காண முடியவில்லை. ஏறாவூரிலும் இப்படியான பழைய பள்ளிவாசலொன்று உள்ளது
இவற்றின் வரலாறு முறையாக ஆராயப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் இவை அழியாமல் பராமரிக்கப்படவும் வேண்டும்.
இந்தப் பள்ளிவாசல் வளாகத்தில் முடப்பட்ட கிணறொன்றில் கல்வெட்டு ஒன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். இது தோண்டியெடுக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும்.
இந்த இடத்திற்கு 2 தடவைகள் சென்றுள்ளேன். இதுவும் அழிந்து விடலாம் என்ற அச்சம் காரணமாகவே இதை எழுதுகிறேன். இது பற்றிய ஆரம்ப ஆய்வு முயற்சிக்கு யாரேனும் நிதியுதவி செய்ய முன்வந்தால், மிகவும் பயனுடைய பணியொன்றைத் தொடங்கலாம்.
Previous Post Next Post