முஸ்லிம் காங்கிரஸ் நாற்றமெடுக்கிறது; பொதுபலேசேனா ஞானசார தேரர்

NEWS


இப்றாஹீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதனை தலைவரும் மக்களை ஏமாற்றுவதாக நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டோம் அதனை யாரும் கணக்கில் எடுக்கவில்லை ஆனால் இன்று அதே கட்சியின் உறுப்பினர் ஒருவர் பேஸ்புக் இல் கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து ஆவணங்கள் அந்தரங்க விடயங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் இதுவே போதும் இந்தக் கட்சியின் நாற்றம் நாடெங்கும் பரவியுள்ளதாக பொதுலசேனா ஞானசார தேரர் சற்று முன்னர் எமது கொழும்பு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சிறப்பு நேர்காணல் ஒன்றின் பின்னர் எமது செய்தியாளரிடம் முஸ்லிம் கட்சிகள் தொடர்பில் பேசிய பொழுது இதனை அவர் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர்,

ஒரு போதும் நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர் தீவிர போக்குள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் மக்களை குழப்பும் அமைப்புக்களுக்கே நாங்கள் எதிரானவர்கள் என்றார். கட்சியின் உறுப்பினர் சி.டி ஆவணங்களை ஜனாதிபதி அலுவலகத்தில் அல்லது ஊடகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் இது தொடர்பில் பொதுபலசேனா அமைப்பு உன்னிப்பாக இருக்கும் என்றார்.
6/grid1/Political
To Top