Top News

எதிர்கட்சித்தலைவர் உதுமாலெப்பைக்கு கிழக்கு முதலமைச்சர் பதில்



கிழக்கு மாகாண சபைக்கு கடந்த ஆண்டு மத்தியரசினால் ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு நிதியினைப் பெற்றுக் கொள்வதற்கு மத்தியரசை கெஞ்ச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாகாண சபைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

அதைவிட துர்ப்பாக்கிய நிலையென்னவென்றால் கடந்த ஆண்டு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த முறை அதில் 51 வீதமான நிதி குறைக்ககப்பட்டே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வேதனையான விடயத்தை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடு குறித்து கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாக இருந்தாலும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 10 இலட்சம் ரூபாவாக இருந்தாலும் கொடுப்பதற்கு முதலமைச்சரும் அமைச்சரும் தயாராக இருக்கின்றோம் ஆனால் மாகாண சபைகளுக்கு கிடைக்க வேண்டிய CBG மற்றும் PSDG ஆகிய நிதியொதுக்கீடுகளே இதுவரை மாகாணத்துக்கு கிடைக்கப் பெறாமல் உள்ளது
அது மாத்திரமன்றி இன்று கொழும்பில் மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் மாகாணங்களுக்கான நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொண்டு பேசவுள்ளோம்
இந்நிலையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை உறுப்பினர்களுக்கு எவ்வளவு நிதியொதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதலமைச்சர் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ,எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நான் உறுப்பினர்களுக்கு 6 மில்லியன் வழங்குவதாக கூறியதாக நான் கூறாத ஒரு விடயத்தை கூறியவர் என்பதால் இந்த கேள்விக்கு கவனமாக பதிலளிக்க வேண்டும்
இன்று எமது மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும் ,ஆகவே இங்கு புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கடந்த 2015 ஆண்டுக்கு முன்னர் 2 மில்லியனாக இருந்த நிதியொதுக்கீட்டை 3 மில்லியனாக அதிகரித்து பின்னர் 4 மில்லியன் வரை அதிகரித்திருக்கின்றோம்.ஆகவே நாம் மேலும் உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டினை அதிகரிக்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வாரியம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது,
ஆனால் மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகள் என்பது கட்டாயமானது என்பதால் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அதனூடாக மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியையும் ஒதுக்கவுள்ளோம்
இதன் போது முதலமைச்சரின் பதிலை ஏகமனதாக சபை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்முனை கிட்டங்கி பாலத்தை அமைத்துத் தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களால் பிரேரணையொன்றும் கொண்டு வரப்பட்டதுடன் அதில் கலந்து கொண்ட உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
இது ஒரு மிக முக்கியமான ஒரு திட்டம் என்பதுடன்  இந்த பாலத்தினூடாக அம்பாறை மட்டக்களப்பு சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை இந்த பாலம் இணைப்பதுடன் இது வௌ்ள காலங்களில் நீரில் மூழ்குவதால் பல உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றது என்பது எமக்கு வேதனையளிக்கின்றது.

இதனடிப்படையில் இந்த திட்டத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்த ஆண்டுக்குள் முன்னெடுக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் அது தொடர்பான திட்டவரைபு தொடர்பில் இன்றே எமது கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளோம்
Previous Post Next Post