Top News

அஸ்மியின் கண்ணீர் மல்கும் கடிதம் (கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்)




ஜவாத் மாகாணசபை உறுப்பினர்
அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர்
தாஹிர் நிந்தவூர் தவிசாளர்
===========================
கொழும்பு
இலங்கை
12.02.2017
அன்புள்ள நண்பர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை காத்து நிற்க இன்று வரை யோசிக்கின்றவர்கள் என்பதன் நிமித்தமாக உங்களுக்குக் கடிதம் எழுத இதில் நான் தெளிவு காணவும் மூவரையும் விழித்து என் மனம் தொடர்ந்து
வற்புறுத்திக் கொண்டிருந்ததால் எழுதுகிறேன்.
ஆனால் என்னிடமிருந்து வரும் கடிதத்திற்கும் முக்கியத்துவம் இருக்காது என்ற உணர்வால் நான் எழுதாமல் விடுவோமா? என யோசித்தும் சத்தியமாகவே ஒரு கனம் தூக்கத்திலிருந்து எழுந்து எழுத என் மனச்சாட்சியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.
நான் இப்படியெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை என்றும், என் கடிதம் எந்த அளவுக்கு மதிக்கப்படும் என்று எண்ணிப் பார்க்காமல் நான் தங்களிடம் முறையீடு
செய்தே ஆக வேண்டும் என்றும் ஏதோ ஒன்று எனக்குள் சொல்கிறது.
எவவாறாகினும் இந்த வடக்கு கிழக்கு மாகாண முஸ்லீம்களின் அரசியல் விடுதலை அதன் அபிலாசைகள் எல்லாம் இன்று காலை பண்டாரநாயக்கவின் நினைவு மண்டபத்தில் வைத்து அடக்கம் செய்து விட்டாலும் உங்களிடம் அதற்க்கான புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் நோக்கம்
எவ்வளவு உன்னதமாக உங்களுக்குத் தோன்றினாலும், அதற்கு நீங்கள் இவ்வளவு பெரிய
விலை கொடுக்க வேண்டுமா?
மிகச்சிந்தித்து நிதானமாக,இந்த கட்சிக்கான இயங்குதளமாக அதன் அதிகார மையத்தில் ஒரு போதும் எண்ணம் கொள்ளாத நீங்கள் இந்த அநியாயம் நடக்கின்ற மேடையில் இவ்வாறு உட்கார முடிந்ததா?
ஹசனலி யார்?
தாறுஸ்ஸலாம் என்ன நடந்தது?
நம் விடுதலை இயக்கம் அதன் தலைமையையை பற்றி உங்கள் சகோதரிகளிடமும் தாய் மார்களிடமும் பேச முடியுமா?
இந்த கட்சியின் பேராளர்களில் நம் ஆரம்ப போராளிகள் எத்தனை பேர் வந்தார்கள்?
தலைவரின் கொலை?
தலைவரின் மரணித்தில் உளமாற பெருவகை அடைந்தவர்களோடு,
தலைவரின்,சமுகத்தின் சொத்துக்களை அபேஷ் செய்தவர்களோடு இவ்வாறு அளவளாவ முடிந்ததா?
நீங்களே பதில் சொல்ல வேண்டும்
மண்ணறை, சமுகப் பொறுப்பு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
எவ்வாறாகினும்,
உங்களுக்கு இக்கடிதம் எழுதி நான் தவறு இழைத்திருந்தால் அதற்காக உங்கள்
மன்னிப்பை வேண்டுகிறேன்
தங்கள் உண்மையுள்ள நண்பர்
அஸ்மி அப்துல் கபூர்
Previous Post Next Post