Top News

இந்திய தீர்மானத்தை முஸ்லிம் முற்போக்கு முன்னணி வரவேற்கிறது



வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று  ஒரு பெரும் முயற்சியில் சம்பந்தனும் அவர்களுடைய தோழர்களும் முயற்சித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் இன்னுமொரு புலி இராச்சியத்தை உருவாக்கும் செயற்றிட்டமாகும். இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நாம் அன்று எதைக் கூறினோமோ அதனைத்தான் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரஸ்தாபித்திருக்கிறார். எனவே அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்குஇந்தியா இலங்கை ஜே.ஆர் ஜெயவர்தன அரசுக்கு அழுத்தம் கொடுத்தது போன்று இப்பொழுது அழுத்தம் கொடுப்பது இல்லை. என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெய்சங்கர் கூறியிருப்பது எமக்கெல்லாம் நிம்மதியைத் தருகின்றது.
எனவே வடக்கு வேறு மாகாணமாக இருக்க வேண்டும். கிழக்கு வேறு மாகாணமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. அது நியாயபூர்வமானது என்பதை இந்தியா இப்போது ஏற்றுக் கொண்டுள்ளதையிட்டுநாம் உண்மையை உணர்ந்ததற்காக அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று நவமணிப் பத்திரிகையை தூக்கிக்காட்டி பேசிய அஸ்வர்நவமணியின் ஆசிரியர் தலையங்கத்தை வாசித்துக் காட்டிகேப்பாப்புலவு மக்களின் போராட்டம் வெற்றி பெறட்டும் என்று எழுதியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு நெடுங்காலமாக அரசாங்கம் தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றதுமுஸ்லிம்களையும் ஏமாற்றி வருகின்றது. எனவேதொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு மக்களின்  போராட்டம்இன்றுடன் 23 நாட்களுக்கு மேலாக இடம்பெறுகின்றது. என்பதை சுட்டிக்காட்டிய அவர்இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்பதையும் அழுத்திக் கூறினார்.
எழுக தமிழ் என்ற போராட்டதை கிழக்கில் நடத்திக் கொண்டு செல்கின்ற விக்னேஸ்வரன்அதில் எழுக தமிழ்முஸ்லிம்கள் என்று கூட சும்மாவாவது முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அது தனித் தமிழைதமிழ் உரிமையை மட்டும்தான் பேசியிருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்கள் அவர்களின் மீது எந்தவிதமான எதிர்பார்ப்பும் வைக்க முடியாது.
அதேபோன்றுஆசிரியர்கள் 4000 பேர் நியமிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே நியமிக்கப்பட இருக்கின்ற  4000 ஆசிரியர்களுள் மௌலவி ஆசிரியர்களையும் நியமிக்ககட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 
மேலும்,
தம்புள்ளைப் பள்ளிக்குரிய காணி சம்பந்தமாக கருத்துத் தெவிவித்த அஸ்வர்இந்த தம்புள்ளைப் பள்ளிக்குரிய மாற்றுக் காணிகளை வழங்கியதாக அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசு உறுதியளித்தது. அன்றைய பிரதம அமைச்சர் டி.எம். ஜயரத்னவாகனத்தரிப்பிடம்சுற்றுப்புறச் சூழலை உருவாக்கக் கூடிய  வசதிகள் எல்லாம் செய்து தரப்பட்டுமாற்றுக் காணிகள் 80 பேர்ச்சஸ் வரை வழங்கப்படும் என்று அன்று கூறிய போதுஅன்றைய பள்ளிநிர்வாகிகள் உடன்படவில்லை. ஆனால்இப்போது 17 நம்பிக்கையாளர்கள் வேறு இடங்களுக்குப் போவோம் என்று கூறியிருக்கின்றார்கள்.  அந்த நிலையில் 18 பேர்ச்சஸை விட ஓர் அங்குலமேனும் தரமுடியாது என அமைச்சர்  பாட்டலி  சம்பிக ரணவக கடுமையாகக் கூறியிருக்கிறார். இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். எனவே ஷரீயா சட்ட நியதியை இழிவுபடுத்தி நூல் எழுதிய இந்த அமைச்சர் சம்பிக ரணவக அமைச்சரிடமிருந்து முஸ்லிம்கள்  எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை வற்புறுத்தி சொல்லி வருகின்றோம். எனவே இந்த விடயத்தில் கூட 90 வீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாகத் தலையிட்டு முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ் ஊடக மாநாட்டில் டளஸ் அழகப்பெரும எம்.பிபேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் தற்கால அரசியல் நிலைமைகளைப் பற்றி தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.
Previous Post Next Post