முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் கட்சி தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது, தான் தலைவர் என்ற காரணத்தினாலும் தான் கிழக்கான் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னை வெகுவாக மக்கள் வெறுப்பதன் மூலம் மனஉளைச்சல் அடைந்துள்ளதாக அவருடன் நெருங்கியவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் கடந்த சிலவாரங்களாக ஆவணங்களை வெளியிடவுள்ளதாக முகநுாலில் பிரச்சாரம் முன்னெடுத்து வருவதாலும் அதிக கவலையடைந்துள்ள ஹக்கீம் தான் தலைமையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிய வருகிறது. இதனை அடுத்து கட்சியின் தலைமைப் பதவி எச்.எம்.எம் ஹரீ்ஸ் அவர்களுக்கு கைமாறவுள்ளது.
தலைவர் ஹக்கீமிற்கு நெருங்கியவரான ஹரீ்ஸ் கட்சியை முன்னெடுத்து செல்லுவார் எனவும் இளநிலை உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அறியக்கிடைக்கிறது. இது உத்தியோகபூர்வமானது அல்ல என்றாலும் இன்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களின் நிலைப்பாடு ஆகும்.