முஸ்லிம் காங்கிரசின் அஸ்திவாரங்களான ஆரம்பகால போராளிகள் கட்சியின் தலைமையினை மாற்றவேண்டும் இல்லையேல் புதிய முஸ்லிம் காங்கிரஸ் உருவாக வேண்டும் என கோரிக்கை விடும் நிலையில் தான் வகிக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியாவது மிஞ்சுமா என்ற நிலையில் மு.காவின் தலைவர் ஹக்கீம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை அடுத்தடுத்து முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இந்த நிலையில் ஹக்கீம் வெளியில் கர்வமாக பேசினாலும் உள் மனதிற்குள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பது புரிகிறது.
கிழக்கு மகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் காலுான்றியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அதன் அடிமட்ட தொண்டர்களை இழந்துள்ள நிலையில் எவ்வாறு தேர்தலொன்றை முகம் கொடுப்பது என்ற சிக்கல் நிலை தோன்றியுள்ளது.