Top News

உயர்பீடத்தில் அதிகம் சூழ்நிலைக்கைதிகள் இருக்கின்றனர் பசீர் சேகுதாவூத்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் நிரந்தரமான கட்சி, இக்கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து என்னை நீக்கினாலும் நான் மற்றையவர்களைப் போல் கட்சியை நீதிமன்றில் நிறுத்த மாட்டேன்.

மக்களுக்காக தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இடைநிறுத்தப்பட்டுள்ள தவி சாளர் பஷீர் ஷேகு தாவூத் தெரிவித்தார்.

அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'கட்சி மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

என் பக்கம் இருக்கும் நியாயங்களை நிரூபிக்க காத்திருக்கிறேன். கட்சியிலிருக்கும் சிலரின் செய்கைகளை என்னால் பார்த்துக் கொண்டு வெறுமனே இருக்க முடியாது.

கடந்த காலங்களில் கட்சியை சில நீதிமன்றத்தில் ஏற்றினார்கள். அவ்வாறான செயற்பாடுகளில் ஒரு போதும் இறங்கமாட்டேன். அரசியல் உயர்பீடத்தில் பலர் சூழ்நிலைக் கைதிகளாக இருந்தே எனது பதவியை இடைநிறுத்துவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள். சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் என்பக்க நியாயங்கள் எனக்கு சார்பாகவே இருக்கும். கட்சியின் தலைவர் இன்று இருக்கலாம். நாளை வேறொருவர் தலைவராக வரலாம். ஆனால் கட்சி நிரந்தரமாக இருக்கும். எந்த சவாலையும் நான் எதிர்கொள்ளத் தயார்' என்றார்.
Previous Post Next Post