Headlines
Loading...
ஓட்டமாவடி கிம்மாவின் ஒத்துழைப்பில் மின்னொளி போட்டி

ஓட்டமாவடி கிம்மாவின் ஒத்துழைப்பில் மின்னொளி போட்டி



எம்.ஐ. அஸ்பாக்

ஓட்டமாவடி யங் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் மின்னொளி உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று 17.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் யங் லயன்ஸ் விளையாட்டுக்கழக தலைவா் ஏ.எல்.எம். அன்வர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிக்கு அல்கிம்மா நிறுவனம் பூரண அனுசரணை வழங்கியிருந்தமை முக்கிய அம்சமாகும்.

இதில் பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் MMS. ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் கலந்து கொண்டதுடன், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி. அஸ்மி மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொருப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி அஹமட், மற்றும் அல்-கிம்மாவின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர், அகீல் டயர் சொப் ஏ.சி.எம். நியாஸ் ஹாஜியார், ஏ.பி. புஹாரி முஹம்மட், ஸ்டைலிஸ் ஆடையக உரிமையாளர் ஏ.எல்.எம். றிஸ்வி, லுக் மேன் ஆடையக உரிமையாளா் ஏ.என்.எம் இக்ராம் (ஜானு) என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இரவு 12.45 மணிவரை நடைபெற்ற இப்போட்டியை கண்டுகளிப்பதற்காக பெரும்திரளானோர் வருகை தந்திருந்தனர். 

இதில் ஓட்டமாவடி யங் லயன்ஸ் வி.க எதிர் கந்தளாய் ஜொலி போய்ஸ் அணிகள் போட்டியிட்டு 3-0 
ஏறாவூர் YSSC வி.க எதிர் வாழைச்சேனை அல் அக்ஸா வி.க அணிகள் போட்டியிட்டு 2-1 
வாழைச்சேனை நியூ ஸ்டார் வி.க எதிர் வவுனியா வளர் பிறை வி.கழகம் போட்டியிட்டு 3-0 
ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் வி.க எதிர் பாலமுனை முகைதீன்ஸ் வி.க ஆகிய அணிகள் போட்டியிட்டு 3-0 எனும் வித்தியாசத்திலும், பிறைந்துரைச்சேனை வேல்ட் ஸ்டார் வி.க எதிர் காத்தான்குடி விக்டரி விளையாட்டுக்கழகம் போட்டியிட்டு பிறைந்துரைச்சேனை வேல்ட் ஸ்டார் வி.க பெணால்டி முறையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது வெற்றி பெற்ற அணிகள் மற்றும் பங்குபற்றிய அனைத்துக் கழகங்களுக்கும் அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

விஷேட விருதாக கந்தளாய் ஜொலி போஸ்ய் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று கோல்களை பெற்றுக்கொடுத்த யங் லயன்ஸ் விளையாட்டுக்கழத்தைச் சேர்ந்த வீரர். எம். சித்தீக் அவர்களுக்கு அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரினால் ரூபாய் 5000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.