நுாற்றுக்கணக்கான விபத்துக்களை சந்தித்த இந்த வளைவு பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது, இன்றோ நாளையோ யாரோ ஒரு சாரதி விபத்தில் சிக்கலாம் என்ற நியதிக்குள் தள்ளப்பட்டு விட்டது. விபத்துக்கள் தடுக்க முடியாதவை. எதேச்சேயாக நடைபெறுபவை ஆனாலும் நாங்கள் அதிலிருந்து விடுபட முடியும்.
சாரதியாகிய நாம், மது அருந்தாமல், வீதி நெறிமுறைகளை பேணி, தலைக்கவசம் அணிந்து, சீற் பெல்ட் பொருத்தி தாம் செல்ல விருக்கும் பாதை தொடர்பில் அறிந்து பாதையில் வாகனத்தை செலுத்த வேண்டும்.
வேகத்தை குறைத்து பாதையில் செல்வதால் 95 சதவீதம் விபத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியும், மீனொடைக்கட்டு வளைவு என்பது எவருக்கும் தெரியாத ஒன்று அதாவது வெளியூர் சாரதிகளுக்கு தெரியாதது துாரத்திலிருந்து பார்க்கையில், இரவில் பயணிக்கையில் ஒரு சரிவான பாதை போலத்தான் தெரியும் ஆனால் அப்படியல்ல நன்று வளைந்த ஓர் வளைவு, இதில் சிலர் வேகமாக செலுத்துவார்கள் ஆனால் அதுவே விபத்து நிகழகைாரணமாக அமையும். ஆக வேகத்தை குறைப்பதன் மூலம் இந்த வளைவிலிருந்து தப்ப முடியும்.
அரச மட்டத்தில் வீதியில் மருங்கில் கேடர்கள் பொருத்த முடியும், பெரிய விளம்பர பதாதை பொருத்த முடியும், நன்கு வெளிச்சமான மின் குமிழ்கள் பொருத்த முடியும் எதை செய்தாலும் விபத்தை தடுக்க முடியாது காரணம் விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதே.
கவனமாக செல்லுங்கள்