முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தனது மகனை அரசியல்வாரிசாகவும் மேயராகவும் அறிவித்தது சரியே காரணம் இன்றிருக்கிற மாற்று அரசியல் களத்தில் தேசிய காங்கிரசுக்கும் அதாஉல்லாவுக்கும் நம்பிக்கையான ஒருவர் அவரது மகனே அந்த விடயத்தில் யாரும் மறுக்க முடியாது என அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத் அலி குறிப்பி்ட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்
இப்பொழுது மாகாண சபை உறுப்பினராகவுள்ள ஏ.எல் தவம் அன்று அதாவது மேயராக அறிவித்த தினத்தில் தேசிய காங்கிரசில் இருந்தவர் அது மாத்திரம் அல்ல பலர் இருந்தனர் இன்று எவரும் இல்லை கட்சிக்கு விசுவாசமாகவும் அபிவிருத்திகளில் கேட்டு செயற்படும் ஒருவராகவும் சக்கி காணப்பட்டார் இது அனைவரும் அறிந்த ஒன்று வேறு ஒருவரிடம் சபை ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிலமை எவ்வாறு இருந்திருக்கும் என சொல்ல தேவையில்லை காரணம் முன்னர் இது குறித்து மக்களுக்கு தகுந்த அனுபவம் உள்ளது.
தேசிய காங்கிரஸ் வசமுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையை மீண்டும் வெல்ல மீண்டும் முன்னாள் மேயர் சக்கியை வேட்பாளராக களமிறக்கினாலும் நல்லதே. அண்மையில் அக்கரைப்பற்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அக்கரைப்பற்றை பார்த்து வியந்திருப்பார் காரணம் நிறைந்த அபிவிருத்திகள் மக்கள் குறை சொல்ல முடியாத தருணங்கள் போராட்டங்கள் அற்ற பூமி என்று ஆயிரம் காரணங்கள். அதாஉல்லாவின் அபிவிருத்திகள் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.