அல்மனார் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்களமாக இதை மாற்றியுள்ளோம்

NEWS
-எம் எச் எம் அன்வர்-


அல்மனார் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்களமாக இதை மாற்றவும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பயன்பெறவும் கடற்கரை வீதியிலிருந்து ஆற்றங்கரை வரை இவ்வீதியில் எவ்வித ஜூம்ஆவும் இடம்பெறுவதில்லை என்பதாலும் இந்த அல்மனார் கல்லாரியில் அமைந்துள்ள ஜாமியுல் கைதரி ஜூம்ஆப்பள்ளிவாயலில் ஜூம்ஆ நடாத்த எமதுநிருவாகம் நடவடிக்கை மேற்கொண்டது

இவ்வாறு நேற்று காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல்மனார் கல்லாரியில் அமைந்துள்ள ஜாமியுல் கைதரி ஜூம்ஆப்பள்ளிவாயல் ஆரம்ப நிகழ்வில் அஷ்ஸெய்ஹ் ஏ எல் மும்தாஸ் மதனி தெரிவித்தார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த இடம் மிகவும் மிகவும் பெறுமதிவாய்ந்தது இந்த இடத்தினை பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளோம் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் அத்துடன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இவ்வாறு தனதுரையில் குறிப்பிட்டார்



6/grid1/Political
To Top