-ரீ.கே.றஹ்மத்துல்லா -
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள சில காணிகளில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதற்குப் பிரதேச செயலகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.
மேற்படி காணிகளின் உத்தரவுப்பத்திரங்கள் மற்றும் அக்காணிகள் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஆகவே, மாகாணக் காணி ஆணையாளரின் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் அக்காணிகளில் கட்டடம் அமைப்பது, வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதுடன் அக்காணிகளுக்குள் நுழைய வேண்டாம் எனவும் அக்காணிகளின் உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இக்காணிகள் என்ற வகையில் மாகாணக் காணி ஆணையாளரினால் தமக்கு பணிப்புரை வழங்கப்பட்டமைக்கு அமையவே இது தொடர்பில் மேற்படி காணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணிக்கமடு புத்தர் சிலை வைப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிலை வைக்கப்பட்டுள்ள மலைப் பிரதேசத்திற்கு அருகாமையிலுள்ள காணிச் சொந்தக்காரர்கள் காணிகளுக்கு செல்வதற்கான தடை மாகாணக் காணி ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிலை வைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பௌத்த முக்கிய தினங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றுவருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.