அபு அலா
அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் அத் தஃவா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (24) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அத் தஃவா இலங்கை இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதியாக வருகை தந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்ஷெஹ் முஹ்ஸின் அஸ்சஹ்றானி, அலி அல்-ஹஃதானி, செய்த் ஸஹ்றானி, தவாப் நிறுவனத்தின் இலங்கை பிரதிப்பணிப்பாளர் அஸ்.-ஷேக் தாசிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மஸ்ஜிதுல் தவ்வாப் ஜூம்ஆப் பள்ளிவாயலின் 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கலினை நாட்டி வைத்தனர்.