Top News

வாடகைக்கு கார் எடுப்பவர்கள் கொஞ்சம் உசாராக இருங்கள்!



இன்று அதிகம் வாடகைக்கு காரை எடுப்பதும் அதனை நாள் மற்றும் மாதக்கணக்கில் உபயோகப்படுத்துவதும் வழமையாகி விட்டது. அதிகமதிகம் வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரர்கள் இந்த வழமையை கொண்டிருக்கின்றனர். உள்ளுரில் இருப்பவர்களும் இதனை வழமையாக கொண்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 3500 ரூபா முதல் 7000 ரூபா வரை நாள் வாடகை அறிவிடப்படுகிறது, இதுபோல 150 கிலோமீற்றர் லிமிட் இந்த தொகைக்கு வழங்கப்படுகிறது. இது ஒருபக்கம் வைத்துவிட்டு வாடகைக்கு காரை கொடுத்துவிட்டு அந்த காரில் கெமரா இருப்பதை சொல்ல மறக்கின்றனர். குடும்ப சகிதம் அல்லது கணவன் மனைவி இந்த வாடகைக்கு காரை எடுத்து சென்றால் அவர்களின் அந்தரங்க விடயங்களை இன்டெர்நெற் மூலம் கார் உரிமையாளரால் பார்க்க முடிகிறது. இது IP கெமரா மூலம் செயல்படுகிறது. PRIVACY இங்கு கொள்ளையடிக்கப்படுகிறது. அதுவும் காரின் டாஸ்போடில், அல்லது கார் பிளேயரில் கெமரா பொருத்தப்படுகிறது மிகவும் சிறியதாக காணப்படும் இந்த கெமராக்கள் ஒலி மற்றும் ஒளியை துல்லியமாக டிரான்ஸ்மீற் செய்கிறது.
கார் வாடகைக்கு கொடுப்பது நல்லவிடயம்தான், அதனை ஜி.பி.எஸ் வைத்து பார்ப்பதும் நல்லது தான் காரணம் அது உங்கள் வியாபார யுக்தி, ஆனால் கெமரா வைப்பது கூடாத விடயம். 

இந்த விடயம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.






Previous Post Next Post