Headlines
Loading...
தவிசாளர் பதவியை நான் கேட்கவுமில்லை தேவையுமில்லை - ஏ.எல்.தவம்

தவிசாளர் பதவியை நான் கேட்கவுமில்லை தேவையுமில்லை - ஏ.எல்.தவம்



பஹத் ஏ.மஜீத்

பதவிகளுக்கோ பட்டங்களுக்கோ பின்னால் செல்லுபவன் நான் அல்ல, குறிப்பாக அக்கரைப்பற்றில் தவிசாளர் பதவிநிலையை இருவர் வைத்திருந்தனர் அவர்கள் என்ன செய்தனர் என்று மக்களுக்கு தெரியும். இந்த பதிவியை நான் கேட்டதாகவும் தருவதாகவும் வதந்திகள் பரவுகிறது. கட்சி எந்தவித முடிவையும் எடுக்கவில்லை அல்லாஹ் போதுமானவன் என்றார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.

மேலும் கருத்துரைத்த அவர்,

முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஆலமரம் இங்கு காக்ககைள், குருவிகள், வௌவால்கள் எல்லாம் வந்து இருந்துவிட்டு செல்லும் சிலவேளைகளில் குரங்குகள் கூட விழுதுகளில் ஆடிவிட்டு செல்லும் ஆனால் ஆலமரம் இவர்களை பார்த்து சிரிக்கும் காரணம் குந்திவிட்டு செல்லபோவது அறிந்து, ஆலமரத்தை அழிக்க எத்தனை கோடாரிகள் துாக்கப்பட்டது, சிலர் மேசைக்கத்திகளோடும் வந்தனர் சிலர் பாரிய கூராயுதங்களையும் கொண்டுவந்தனர். மரத்தை வெட்ட முடியவில்லை விழுதுகளை அறுக்கவும் அதனை அழிக்கவுமே முடிந்தது. மரம் நமது மரம் இதனை காக்க நாம் அனைவரும் போராட வேண்டும்.

எத்தைன சோடினை கதைகள், எதிர்ப்புகள், ஆயுத மிரட்டல்கள், கட்டுக்கதைகளை இந்த கட்சி சந்தித்துள்ளது இவைகள் பெரிதல்ல நாங்கள் இவைகளுக்காக பயப்படுபவர்களும் அல்ல, இறைவன் பெரியவன்