Top News

வட்­டார தேர்­த­லையே மக்கள் விரும்­பு­கின்­றனர்: அமைச்சர் பைஸர்

வட்­டார தேர்­த­லையே மக்கள் விரும்­பு­கின்­றனர்:அமைச்சர் பைஸர்
வட்­டா­ர­முறை மற்றும் விகி­தா­சார முறை­மை­யுடன் கூடிய கலப்புத் தேர்தல் முறை­மை­யினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்தில் வீழ்ச்சி ஏற்­படும் என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன்.



ஆனால் நாட்டு மக்கள்  விருப்பு வாக்கு முறை தேர்­தலை அல்ல வட்­டார முறை தேர்­த­லையே விரும்­பு­கி­றார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார். 

தனியார் தொலைக்­காட்சி சேவையில் நேற்று  முன்­தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர்  தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்; 
உள்ளூர் அதி­கார சபைகள் தேர்­தல்கள் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்ய வேண்­டு­மென்றால் சகல  கட்­சி­க­ளி­னதும் கருத்­து­களைப்  பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

நாட்டின் அபி­வி­ருத்­திக்கு, வட்­டா­ரத்­துக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டிய பிர­தி­நி­தி­களே தேவை. விருப்­பு­வாக்கு முறை தேர்­தல்­களில் பண பல­முள்­ள­வர்­களே வெற்­றி­களை ஈட்டிக் கொள்­கி­றார்கள். படித்­த­வர்கள், சமூக சேவையில்  ஆர்­வ­முள்­ள­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. 

எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்கை பிர­சு­ரத்­திற்­காக அர­சாங்க அச்­ச­கத்­துக்கு  அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. சில தினங்­களில்  வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­படும் எல்லை நிர்­ணய அறிக்கை  கால­தா­ம­தத்­திற்கு  நானே காரணம் என்று குற்றம் சுமத்­து­கி­றார்கள். தேர்­தலை பிற்­போ­டு­வ­தாகக் கூறு­கி­றார்கள். 

கடந்த அர­சாங்­கத்­தினால் ஒழுங்­காக எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­ப­டா­மையே  முறைப்­பா­டுகள் கிடைத்­த­மைக்கு  கார­ண­மாகும். கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டுகள் விசா­ரிக்­கப்­பட்டு  தீர்­வுகள் காணப்­பட்­டுள்­ளன. 

எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவில் ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்சி,  ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி,  தமிழ்த்தேசிய  கூட்டமைப்பின் பிரதிநிதிகள்  நியமிக்கப்பட்டிருந்தார்கள். எல்லை நிர்ணயங்கள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன.

கடந்த அரசாங்கக் காலத்தில் போன்று இரகசியமாக நடைபெறவில்லை என்றார். (Vidivelli)
Previous Post Next Post