Top News

நம்பிக்கை துளிர் விடுகின்றது - சேகு



எம்.எல்.எஸ்.டீன் 

மட்டக்களப்பில் அண்மையில்  நடைபெற்ற  எழுக  தமிழ்  பேரணி  நிகழ்வின்போது  வடமாகாண  சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்     அங்கு குழுமியிருந்த   பல்லாயிரக்கணக்கான   தமிழ்   மக்களை   விளித்து   முஸ்லிம்   மக்களுக்கும்      சமஷ்டி அலகு    வழங்கப்பட    வேண்டும்    என்பதில்    நாம்    உறுதியாக    இருக்கிறோம்    என்று    பேசியிருப்பது 1956லும்,    1961லும்    தமிழரசுக்    கட்சி    மாநாடுகளிலும்    1977இல்    தமிழர்    விடுதலைக்    கூட்டணியின் தேர்தல்      விஞ்ஞாபனத்திலும்      வட      கிழக்கு      முஸ்லிம்களுக்கு      அளித்த      வாக்குறுதிகளுக்கும் உத்தரவாதங்களுக்கும்  நேர்பாடாக  இருப்பதுடன்,  முஸ்லிம்கள்  மனதில்  பட்டுப்  போயிருந்த   நம்பிக்கை மீது   ஒரு   சொட்டு   நீரைத்   தெளித்து   துளிர்க்கச்   செய்துள்ளதற்காக   அவரை   வாழ்த்துகிறோம்';    என்று முஸ்லிம்    தேசிய    முன்னணியின்    செயலாளர்    நாயகம்    எம்.எச்.சேகு  இஸ்ஸதீன்  கூறினார். 

அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்ற சமகால அரசியல் நிலை தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 'வடக்கு    கிழக்கு    முஸ்லிம்களை    பிரதிநிதித்துவப்படுத்த    மூன்று    கட்சிகள்    இருந்தபோதும்    அவை எதுவும்    இதுவரை    வடகிழக்கு    முஸ்லிம்    தேசியம்    தொடர்பான    எதுவித    தீர்வுத்    திட்டத்தையும் முன்வைக்காது   நுனிப்புல்   மேய்ந்து   கொண்டிருக்கின்றன.   இந்த   வேளையில்   தமிழ்   பேசும்   மக்களின் ஓர்   அங்கமான   வடகிழக்கு   முஸ்லிம்களுக்கு   அதிகபட்ச   அதிகாரப்பரவலாக்க   ஏற்பாடான   சமஷ்டி அலகு   வழக்கப்பட   வேண்டும்   என்ற   கோரிக்கையை   முதல்   முதலாக   முன்வைத்தது   எமது   முஸ்லிம் தேசிய  முன்னணிதான். ஆனால்,     தமிழ்     மக்கள்     பேரவையின்     இணைத்     தலைவர்களில்     ஒருவரான முதலமைச்சர்   சி.வி.விக்னேஸ்வரன்   பேச்சளவிலாவது   முஸ்லிம்   மக்களுக்கும்   ஒரு   சமஷ்டி   அலகு வழங்கப்பட  வேண்டும்  என்று  கூறியிருப்பது  முஸ்லிம்களின்  மனதை  நெகிழ  வைத்த  திருப்பமாகும். முஸ்லிம்களோடு    சேர்ந்து முஸ்லிம்களுக்கான   பொருத்தமான,  

 சமமான   தீர்வுத்   திட்டத்தையும்   வைத்து   செயற்படுமாக   இருந்தால் தமிழ்   மக்கள்   பேரவையோடு   முஸ்லிம்கள்   நெருக்கமான   உறவை   வளர்த்து   நீடித்துக்கொள்வார்கள் என்பதை  நாம்  முன்னின்று  நடாத்திக்  காட்டுவோம். வடமாகாணத்து        முஸ்லிம்களையும்        கிழக்கு        மாகாணத்து        முஸ்லிம்களையும்        அவர்கள் பெரும்பான்மையாக   வாழும்   நிலப்பரப்புகளை   நிலத்தொடர்பற்ற   வகையில்   இணைப்பதன்   மூலம்   இரு மாகாணத்து  முஸ்லிம்களுக்கும்  ஒரு  சமஷ்டி  ஆட்சி  அலகை  பெற  முடியுமானால்  அது  பற்றி  அதிகம் யோசிக்க  வேண்டிய  தார்மீக  கடமை  ரிசாட்டுக்கே  உண்டு. கிழக்கிலுள்ள   தமிழ்   பெரும்பான்மை   பிரதேசங்களும்   நிலத்தொடர்பற்றவையாகத்தான்   இருக்கின்றன. அவற்றின்    நிலத்தொடர்பற்ற   தன்மையை    கருத்துக்கு    எடுத்துத்தான்    வடமாகாணத்தோடு    இணைத்து வடகிழக்குத்  தமிழர்களுக்கான  சமஷ்டி  அலகு  வடக்கு  கிழக்கில்  உருவாக்கப்படும்.  அது  போலத்தான் முஸ்லிம்களுக்குமான  சமஷ்டி  அலகும்  உருவாக்கப்படும். ஒரே    நேரத்தில்    வடகிழக்கு    முஸ்லிம்களுக்கான    அர்த்தபுஷ்டியுள்ள    தீர்வுத்    திட்டத்திற்காய்    குரல் எழுப்பும்      சமூகக்      கடமையும்,      முஸ்லிம்      தேசியக்      கூட்டமைப்பின்      பொதுச்சின்னத்தின் 


     கீழ் போட்டியிடுவதில்   வெற்றி   வாய்ப்பும்   முஸ்லிம்   தேசியக்   கூட்டமைப்போடு   இணைவது   பற்றி   தேசிய காங்கிரசை  தீவிரமாக  சிந்திக்க  வைக்கும். எனவே    இன்று    வடகிழக்கு    முஸ்லிம்    தேசியத்தின்    இனப்பிரச்சினை    தீர்வுக்கான    முன்மொழிவை ஒன்றிணைந்து    செய்வதற்கு    சமூகப்    பற்றுள்ள    தனிநபர்களும்    கட்சிகளும்    முஸ்லிம்    கூட்டமைப்பை உருவாக்க   வேண்டியது   அவசியமாக   உள்ளது.   சாதகமாக   சிந்திக்கும்   விக்னேஸ்வரன்   ஐயா   போன்ற தமிழ்  தலைவர்களோடு  பேச்சு  வார்த்தைகளை  ஆரம்பித்து  தனிப்பட்ட  முறையிலும்,  இரு  சமூகங்களும் இணைந்தும்  தமிழ்  பேசும்  மக்களுக்கான  தீர்வுகளை  பெற  முயற்சிப்பதே  சாலச்  சிறந்ததாகும்' என்றார்
Previous Post Next Post