Headlines
Loading...
எங்கே போனார்கள் முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பிக்களும்?

எங்கே போனார்கள் முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பிக்களும்?














தலை­மைத்­துவ பாணிகள் தலை­வரின் நடத்­தை­களை குறிக்­கின்­றன. இது தலை­வரின் சித்தாந்தம், ஆளுமை மற்றும் அனு­ப­வத்தின் விளை­வாக ஏற்­ப­டு­வ­தாகும். இந்த விட­யத்தில் முஸ்லிம் தலை­மைகள் குறிப்­பாக அர­சியல், சிவில் தலை­மைகள் எவ்­வி­டத்தில் இருக்­கின்­றனர் என நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.
இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை பொறுத்­த­மட்டில் சிவில் சமூகத் தலை­மை­களை பார்க்­கிலும் அர­சியல் தலை­மை­களே சமூ­கத்தில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. பொதுப் பணிகள் அல்­லது சமூக ஆர்வம் என்­பதை பார்க்­கிலும் அர­சியல் நோக்­கமும் வியா­பார நோக்­க­முமே மேலோங்கி நிற்­கி­ன்றன. இதனால் தொட்டில் முதல் சுடு­காடு வரை­யி­லான அனைத்­துமே வியா­பார அர­சியல்  மயப்­பட்­டி­ருக்­கி­றது. 
இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சி­யவை பொறுத்­த­வரை அர­சியல் தலைமை தெரிவை பெரும் வியா­பா­ரி­களே தீர்­மா­னிக்­கின்­றனர். அர­சி­யல்­வா­திகள் வணி­கர்­களின் பின்னால் நிற்­ப­தனால் அவர்­களை மேலெழச்­செய்­வதும் வீழ்த்­து­வதும் வியா­பா­ரி­களின் கைக­ளி­லேயே தங்­கி­யி­ருக்­கி­ன்றன. இவ்­வா­றான அர­சியல் தலை­மை­களை தாண்டி ஆட்­சி­யா­ள­னொ­ருவன் உரு­வா­க­வேண்­டு­மானால் அவன் வாரிசு அர­சியல் அல்­லது குடும்ப அர­சியல் பின்­ன­ணியை கொண்­டி­ருக்க வேண்­டிய கட்­டா­ய­மொன்று காணப்­ப­டு­கின்­றது. 
மறு­புறம் சிவில் தலை­மை­களை எடுத்து நோக்கின் பெரும்­பாலும் அவர்கள் வியா­பா­ரி­களின் பின்னால் இயங்கும் தரப்­பி­ன­ராக அல்­லது அர­சி­யல்­வா­தி­களின் நிகழ்ச்சி நிரலை மக்கள் மயப்­ப­டுத்­து­வ­தற்­கான அமைப்­பி­னர்­க­ளாவே செயற்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு தரப்­பி­ன­ரா­லேயே இலங்கை முஸ்­லிம்கள் ஆளப்­ப­டு­கின்­றனர், வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர். 
இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக இயங்கிவரும் அமைப்­பு­க­ளாக இருந்­தாலும் சரி, தற்­கால பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்­திய கோஷங்­க­ளுடன் இன்று நேற்று உரு­வா­கிய அமைப்­பு­க­ளாக இருப்­பினும் அவர்­க­ளி­டத்தில் நேரிய சிந்­த­னையோ நாட்­டுப்­பற்­றையோ காண முடி­வ­தில்லை. பெரும்­பாலும் மத்­திய கிழக்கு, ஐரோப்பா, மேற்­கத்­திய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பணத்தில் இயங்­கு­வதால் அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்­க­மை­யவே செயற்­ப­டு­கின்­றனர்.
அவ்­வாறு வரும் பணத்தில் பெரும் பகு­தியை நிர்வாக செல­வின்­பேரில் சூறை­யாடி அல்­லது சிறியதொகையை மட்­டுமே சமூக பணிக்­காக செல­விட்­டு­விட்டு நிதி வழங்­கு­நரை திருப்­திப்­ப­டுத்தும் நோக்கில் செயற்­ப­டு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யதே. அதிலும் சிவில் அமைப்­பு­க­ளுக்­கி­டை­யே­யான போட்­டித்­தன்மை வருந்­தத்­­தக்க வகையில் அமை­ந்துள்ளன.இதற்­கப்பால் இஸ்­லா­மிய சீர் திருத்த இயங்­கங்கள் அல்­லது சன்­மார்க்க அமைப்­பு­களை நோக்­கு­கையில் அவர்கள் தமது இயக்கம் அல்­லது அமைப்பை முதன்­மைப்­ப­டுத்­தவும் விரிவு படுத்­தவும் அடி­த­டி­வரை செல்லும் நிலை­மையே அண்­மைக்­கால பதி­வுகள் எமக்கு எடுத்­தி­யம்­பு­கின்­றன.
இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு விதி­வி­லக்­காக ஓரிரு அர­சியல் தலை­மை­களும் கட்­சி­களும் அமைப்­பு­களும் இயக்­கங்­களும் இருக்­கின்றன. நான் பொது­வான நிலை­மை­யையே எடுத்­துக்­கூ­றினேன்.இந்த பின்­ன­ணியில் நாட்டில் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­திடம் சமய, சமூக மாற்­றங்­களை எதிர்­பார்க்­கிறோம். அது எமக்கு இன்­று­வரை தோல்­வி­யையே தந்­தி­ருக்­கி­றது. 
சிறந்த தலை­மைத்­து­வத்தை உரு­வாக்கி அதற்­கான அழ­கிய வழி­காட்­டல்­களை தந்த இஸ்­லா­மிய சமூ­கத்தில் இவ்­வா­றான நிலை­மையில் இருப்­ப­தை­யிட்டு மிகவும் வேத­னையாக இருக்­கி­றது. குறிப்­பாக, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் பற்றி பேசத் தெரி­யாத அல்­லது அப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர முடி­யாத அர­சியல் தலை­மை­களை நாம் ஜன­நா­யக போராட்ட களத்தில் இறக்­கி­யி­ருக்­கின்­றமை எமது முதல் தோல்­வி­யாகும். 
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா , சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலையம், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், கிழக்கு மாகாண காணிச் செய­லணி, ஆலோ­சனை மற்றும் நல்­லி­ணக்கப் பேரவை என்­பன முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை சந்­தித்­தன. இதன்­போது அவர் குறிப்­பிட்ட முக்­கிய விடயம் எம் சமூ­கத்தை சிந்­திக்க தூண்­டியுள்ளது. 
அதா­வது, தமிழ் அர­சியல் தலை­மைகள் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் சமூக பிரச்­சினை விட­யத்தில் செயற்­ப­டு­வ­தில்லை எனும் கருத்தை அவர் கூறி­யி­ருக்­கின்றார். அத்­துடன் தமிழ் தலை­மைகள் போன்று செயற்­பட சிவில் அமைப்­புகள் முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்­ப­தையும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.பிர­த­ம­ராக ஒரு தட­வையும் ஜனா­தி­ப­தி­யாக இரு தடை­வையும் நாட்டை நிர்­வ­கித்த ஒரு சிங்­கள பௌத்த தலைவி, தமிழ் தலை­மை­களை முஸ்­லிம்க­ளா­கிய எமக்கு உதா­ரணம் காட்­டு­கிறார் என்றால் நமது நிலைமை என்ன? நாம் எங்கு இருக்­கிறோம்? எமது தலை­மைகள் எங்கு இருக்­கின்­றன?சந்­தி­ரிக்கா அம்­மையார் குறிப்­பிட்­டதை நாம் மேலும் கவ­னிப்போம், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உங்­களைப் போன்ற ஒழுங்­க­மைப்­புடன் இயங்கும் சிவில் அமைப்­புக்கள் அழுத்தம் கொடுத்து இப்­பி­ரச்­சி­னை­களை அரசின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர வேண்டும். தமிழ்த் தலை­வர்கள் போன்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் செயற்­பட அழுத்தம் கொடுங்கள் என சிவில் அமைப்­பு­களை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.
சிவில் அமைப்­புகள் முன்னாள் ஜனா­தி­ப­தியின் கூற்றை கவ­னத்­திற்­கொண்டு அர­சி­யல்வா­தி­க­ளுக்கு கடு­மை­யாக அழுத்தம் கொடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.இதே­வேளை, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில், 'நானும் என்னால் முடிந்த சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்பேன்' என குறிப்­பிட்­டி­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, விரைவில் இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பாக அமைச்­சர்­களை அழைத்துப் பேசுவேன். கிழக்கு மாகாண காணிப் பிரச்­சினை குறித்து அம்­பாறை அரச அதி­பரை அழைத்துப் பேசுவேன் என்றும் சிவில் அமைப்­பி­ன­ரிடம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அஷ்­ரபைத் தவிர முஸ்லிம் தலை­வர்கள் எவரும், தமது சமூக உரி­மை­க­ளுக்­காகப் போரா­டு­வ­தில்லை என்று தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி, தனது அர­சாங்க காலத்தில் அஷ்­ர­புக்கும் ஏ.எச்.எம். பௌசிக்கும் முக்­கிய அமைச்­சுக்கள், பத­வி­களை வழங்­கினேன். அவற்றின் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­பட்­டன என்றும் தெரி­வித்த அவர், அமைச்சர் அஷ்ரப், துறை­மு­கத்தில் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்­க­ளுக்கு தொழில் வழங்­கினார் என்றும் குறிப்­பிட்டார்.
ஜன­நா­யக ரீதியில் தெரி­வா­கிய உலகின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா அம்­மை­யாரின்  கருத்­துக்கள் காத்­தி­ர­மா­னவை. இதில் நாம் பல பாடங்கள் கற்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்கு அப்பால் நமது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள் குறித்தும் கவ­னத்­திற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.தற்போதைய அர­சியல் தலைமை­களால் சமூத்­திற்கு எந்தப் பய­னு­மில்லை. வேறு தெரி­வின்றி நாம் ஜன­நா­யக ரீதியில் நிய­மித்த அர­சி­யல்­வா­தி­களை இப்­போ­தைக்கு புறந்­தள்­ளி­விட முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. தற்­போது நாம் மீண்டும் முதல் படி­யி­லி­ருந்து ஏற­வேண்­டி­ய­தில்லை. இருக்­கிற இடத்தில் சமூக மாற்­றத்­திற்­கான ஏணிப்­ப­டியை வைத்து ஏற­வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கிறோம். அதற்­கான முயற்சி­களே இன்­றைய தேவை­யாகும். ஆகவே, இருக்­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டு­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. 
கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் www.manthri.lk என்ற இணை­யத்­தளம் மேற்­கொண்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டை­யி­லான முடி­வு­களை வைத்து ஆராய்வோம்.அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்ற செயற்­பா­டு­களில் பங்­கு­பற்­று­வதன் அடிப்­ப­டையில் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இதில் முதலாம் இடத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் இரண்டாம் இடத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக்க பத்­தி­ர­னவும் அடுத்து மூன்று இடங்­களை மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்­களும் 6 ஆம் இடத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவும் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இது இவ்­வா­றி­ருக்க  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம் (28), ரிஷாத் பதி­யுதீன் (38), முஜிபுர் ரஹ்மான் (39), எஸ்.எம்.மரிக்கார் (42), கபீர் ஹாஸிம் (51), எம்.எச்.எம்.நவவி (57), அப்­துல்லாஹ் மஹ்ரூப் (72), பைஸர் முஸ்­தபா (93), அலி­சாஹிர் மௌலானா (100), எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் (103), ஏ.ஆர்.இஷாக் (115), இம்ரான் மஹ்ரூப் (133), ஏ.எச்.எம்.பௌஸி (136), எம்.எச்.எம்.சல்மான் (144), எம்.ஐ.எம்.மன்சூர் (153), அமீர் அலி (155), காதர் மஸ்தான் (162), எம்.எச்.அப்துல் ஹலீம் (163), பைஸல் காஸிம் (166), எம்.எம்.ஹரீஸ் (193), பாரா­ளு­மன்ற பத­வியை இரா­ஜி­னாமா செய்த டாக்டர் ஏ.ஆர்.ஹபீஸ் (211), எம்.எஸ்.தௌபீக் (217) என்ற அடிப்­ப­டையில் தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். இதனை மேலும் தெ ளிவாக விளக்­கப்­படம் மூலம் காட்­டி­யி­ருக்­கிறோம். 

இதே­வேளை, ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தியும் எந்­தெந்த துறை விவா­தங்­களில் கலந்­து­கொண்டு பேசி­னார்கள் அல்­லது கேள்வி எழுப்­பி­னார்கள் எனும் அடிப்­ப­டை­யிலும் மேலும் தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவற்றில் முன்­னிலை வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளையும் அவர்கள் பெற்­றி­ருக்கும் நிலையை அடைப்­புக்குள் குறித்து விளக்­கப்­ப­டத்­துடன் காட்­டி­யி­ருக்­கிறோம். 
இதில் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்­டிய பல விட­யங்கள் இருக்­கின்­றன.  அமைச்சர் ஹக்கீம் 7 விட­யங்­களில் மாத்­திரம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே முதல் மூன்று இடத்­திற்குள் இருக்­கிறார். அடுத்­த­ப­டி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் 6 தலைப்­பு­களின் கீழும் கொழும்பு மக்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்­புடை விவ­கா­ரங்­களில் அதி­க­மாக பங்­கு­கொண்­டி­ருக்­கிறார். அத்­துடன் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் அவ­ரு­டைய அமைச்­சுடன் தொடர்­பு­டைய தலைப்­புக்­க­மை­யவே அதி­க­மாக செயற்­பட்­டி­ருக்­கிறார். முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் கபீர் ஹாஸிம் பொரு­ளா­தாரம் மற்றும் வர்த்­தக துறை உள்­ளிட்ட விட­யங்­க­ளி­லேயே அதிக கவனம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.
முஸ்லிம் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இம்ரான் மஹ்­ரூப்தான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே கல்வி, சமூக சேவைகள் மற்றும் நல­னோம்பல் விட­யத்தில் அதி­க­மாக பாரா­ளு­மன்றில் பேசி­யி­ருக்­கிறார் , கேள்வி எழு­ப்பி­யி­ருக்­கிறார். அது­மட்­டு­மின்றி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே இவர்தான் அதிக தலைப்­பு­களின் கீழ் அமர்­வு­களில் பங்­கு­பற்றி உரை­யாற்­றி­யி­ருக்­கிறார். 
கட்­சி­க­ளுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதி­யுதீன் ஆகியோர் அவ­ர்களது அமைச்­சுக்­க­ளுக்கு கீழுள்ள துறை­களில் மாத்­திரம் அதிகம் கவனம் செலுத்­து­வதை manthri.lk இணை­யத்தில் கண்­கா­ணிப்பின் அடிப்­ப­டையில் தெரி­ய­வ­ரு­கி­றது.
இடம்­பெ­யர்ந்த மக்­களின் வாழ்க்கை குறித்து அதிக கவனம் செலுத்­து­வ­தாக கூறி­வரும் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் 37 ஆவது இடத்­திலும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாவும் 39 ஆவது இடத்­தி­லேயே இருக்­கிறார்கள். இவர்­களை விட இம்ரான் மஹ்ரூப், அலி­சாஹிர் மௌலானா, அப்­துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நாம் தந்­தி­ருக்கும் அட்­ட­வ­ணைக்கு மேல­தி­க­மாக மீள்­கு­டி­யேற்ற விவ­கா­ரத்தில் முன்­னி­லையில் இருக்­கின்­றனர். 
இது இவ்­வா­றி­ருக்க அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மிகவும் பின்­தங்­கி­யி­ருப்­பது முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அதி­க­மாக இருக்கும் மாவட்ட பிர­தி­நி­தி­களின் நிலை­மையை காட்­டு­கி­றது. அதுவும் அங்­குள்ள இரு பிர­தி­ய­மைச்­சர்­க­ளி­னது நிலை மோச­மா­கவே இருக்­கி­றது. இன்­னொரு விட­யத்தை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும். அதா­வது, முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் சர்ச்சை இன்னும் தீராத  நிலையில் தேசி­யப்­பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யி­ருக்கும் எம்.எஸ்.தௌபீக் இரு தலைப்­பு­க­ளுக்கு கீழேயே உரை­யாற்­றி­யி­ருக்­கிறார். இவர் கடந்த வருடம் ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஒரு வரு­ட­கா­ல­மாக பாரா­ளு­மன்­றுக்கு சென்­றி­ருந்தும் இவ்­வா­றி­ருப்­பது பல கேள்­வி­களை தோற்­று­விக்­கி­றது. மற்­றைய தேசிய பட்­டியல் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி எம்.எஸ்.எம்.சல்­மானும் குறிப்­பிட்ட சில தலைப்­பு­களின் கீழ்தான் பாரா­ளு­மன்ற விவா­தங்­களில் மட்டுமே கலந்­து­கொண்­டி­ருக்­கிறார். 
எனவே தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி என்­பது முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள ஆளு­மை­மிக்­க­வர்­களால் நிரப்­பப்­பட வேண்டும். பிரதியமைச்சர் ஹரீஸ் விளையாட்டு துறையில் முன்னிலை பெறவில்லை. அத்துடன், பிரதியமைச்சர் அமீர் அலி அவரது அமைச்சுக்கு கீழான தலைப்பு எவற்றிலும் முன்னிலை பெறாமையையும் சுட்டிக்காட்டலாம்.முஸ்லிம் சிவில் அமைப்புகள் வெறு­மனே நாம் அர­சி­யல்­வா­தி­களின் பல­வீ­னங்­களை மட்டும் சுட்­டிக்­காட்­டிக்­கொண்­டி­ராது இனி­வரும் காலங்­களில் அவர்­க­ளுடன் இணைந்து சமூக கட்­ட­மைப்பில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 
சந்­தி­ரிக்க அம்­மை­யார் குறிப்­பிட்­ட­துபோல் இதற்கு சிவில் அமைப்­பு­களின் திட்­ட­மிடல் ஒன்று அவ­சி­யப்­ப­டு­கின்­றது. கடந்த வருடம் மே மாதம் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மலை­ய­கப்­ப­கு­தி­களில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு அனர்த்­தங்­க­ளின்­போது முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் மார்க்க இயக்­கங்­களும் ஒன்­றி­ணைந்து பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தன. நிவா­ரண ஒருங்­கி­ணைப்பு நிலையம் (ஆர்.சி.சி.) எனும் பெயரில் இயங்­கிது போன்று முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் விட­யத்தில் கைகோர்க்க வேண்டும்.
வடக்கு மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், வடக்கு - கிழக்கு மாகாண காணிப் பிரச்­சி­னைகள், உள்­ளூ­ராட்சி எல்லை நிர்­ணய முறை­கே­டு­களும் புறக்­க­ணிப்பும்,  முஸ்­லிம்­களின் கல்வி மேம்­பாடு, மௌலவி ஆசி­ரியர் நிய­மனம்,  இன­வாத பிரச்­சி­னைகள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களின் பிரச்­சி­னைகள், பொரு­ளா­தர வர்த்­தக விவ­காரம், வீட்­டுத்­திட்­டங்கள், உட்­கட்­ட­மைப்பு, மீனவர் பிரச்­சி­னைகள், காட்­டு­யானை தொல்லை, குர்ஆன் மத்­ரஸா பாடத்­திட்டம் இவ்­வா­றான பல விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வேண்­டியி­ருக்­கி­றது.
இவ்­வி­டயம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் கடந்த இரு வரு­டங்­க­ளுக்குள் எவ்­வாறு செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது குறித்து மந்­திரி இணை­யத்­த­ளத்தின் கண்­கா­ணிப்பில் தெளி­வா­கி­றது. இவர்­களை சிவில் அமைப்­புகள் மேல்­நோக்­கிச்­செல்ல உந்த வேண்டும். அப்­போ­துதான் எம் சமூ­கத்தின் இன்­றைய நிலையை கொஞ்­ச­மா­வது உயர்த்­த­மு­டியும்.
(விடிவெள்ளி)