ஷேக் மிஷாரி
பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் புதல்வர் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நேரடி அரசியலில் களமிறங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இதற்கான காய்நகர்த்தலை செய்து வருவதாக அறியவருகிறது.
அம்பாறை மாவட்டத்திலும், முழு கிழக்கு மாகாணத்திலும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதால் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறு்பினரும், பெருந்தலைவர் அஷ்ரபின் மனைவியுமான பேரியல் அஷ்ரப் அம்மையாரை நேரடி அரசியலுக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, தான் நேரடி அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவிக்காத நிலையில் தன்னுடைய புதல்வர் அமானை களமிறக்க சிந்திப்பதாகவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடரந்து தொடரந்துவரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிங்கி மு.கா வசமிருக்கும் கல்முனை மாநகர சபையை கைப்பற்ற கைச்சின்னத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் களமிங்கவும் வெற்றிபெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என்பவற்றில் மிளிர்ந்து தேசிய அரசியலில் சிறந்த ஒரு இடத்தை வழங்க கட்சி தயாராகவுள்ளதாகவும் முஸ்தீபு சொல்லப்பட்டுள்ளது.
விளம்பர துறையில் கொடிகட்டி பறக்கும் அமான் அஷ்ரப் சர்வதேச TedX பேச்சாளர் ஆவார், நவீன பிரச்சாரங்களை முன்னெடுப்பது, பிரச்சார யுக்தி, சமூக அரசியல் மற்றும் மொழியறிவு போன்றனவும் அமானை முன்னிலைக்கு கொண்டுவரும்.
மாநகர முதல்வர், கிழக்கு மகாண முதலமைச்சர் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற நிலைகளுக்கும் பெருந்தலைவரின் மகன் என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல முடியும் . அரசியல் உலகில் எதுவும் எப்போதும் நடக்கும் என்பது நிஜம்.