Top News

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறும் அரசுக்கு ரீட்டா பரிந்துரை

இலங்­கையில் நீடித்த 30 வருட கால யுத்­தத்­தினால் முஸ்­லிம்கள் கடும்­பா­திப்­புக்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள சிறு­பான்­மை­யினர் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயா, 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது இலங்கை அர­சாங்­கத்தின் கடப்­பாடு எனவும் தெரி­வித்­துள்ளார்.



கடந்த ஒக்­டோபர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அவர், ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு நேற்று முன்­தினம் சமர்ப்­பித்­துள்ள தனது விரி­வான அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்­களைக் குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் தனது அறிக்­கையில் முஸ்­லிம்கள் தொடர்­பான தனி­யான உப தலைப்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­வது, 
இலங்­கையில் முஸ்­லிம்கள் மொத்த சனத்­தொ­கையில்  10 இல் 1 வீத­மாக வாழ்­கின்­றனர்.  

கிழக்கு மாகா­ணத்தில் மூன்றில் ஒரு பங்­கினர் வாழ்­கின்­றனர்.  முஸ்­லிம்­களை இலங்­கையின் தனித்­து­வ­மான சிறு­பான்மை இன­மாக கருதி அங்­கீ­க­ரிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். 

போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் மிகக் கடு­மை­யான பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். குறிப்­பாக தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அச்­சு­றுத்தல், துன்­பு­றுத்தல், கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், நிலங்­களை ஆக்­கி­ர­மித்தல், படு­கொலை செய்தல் என போர் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் புலி­களால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அது­மாத்­தி­ர­மன்றி முஸ்­லிம்கள் போரினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அக் காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற பிர­தான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் முற்­றாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.  

மேலும் போர் முடி­வுக்கு வந்த பிற்­பாடு உள்ளூர் மற்றும் தேசிய ஆட்­சி­க­ளிலும் முஸ்­லிம்கள் தமக்குப் போது­மான அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­ப­ட­வில்லை என கவலை கொண்­டுள்­ளனர். 

''தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் கூட எங்­களை நிரா­க­ரித்­து­வ­ரு­கி­றது'' என என்னைச் சந்­தித்த முஸ்லிம் பிர­தி­நிதி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் எதிர்­கா­லத்தில் நடை­மு­றைக்கு வர­வுள்ள புதிய தேர்தல் முறை­யா­னது தமக்­கு­ரிய விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­யுமா என்­ப­திலும் முஸ்­லிம்கள் கவலை கொண்­டுள்­ளனர்.  

தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் சீர்­தி­ருத்தம் மற்றும் நல்­லி­ணக்க முயற்­சி­களில் முஸ்­லிம்­க­ளையும் அங்­கீ­க­ரித்து அர­சியல் பரப்பில் அவர்­க­ளது குர­லுக்கும் செவி­சாய்க்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­யா­மாகும் என அவர் தனது அறிக்­கையில் முஸ்­லிம்கள் தொடர்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை தனது இலங்கை விஜ­யத்தின் போது கண்­ட­றி­யப்­பட்ட விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவர் பல சிபா­ரி­சு­க­ளையும் அர­சாங்­கத்­திற்கு முன்­வைத்­துள்ளார். 

அவற்றில்  சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராய   விசேட சுயா­தீன ஆணைக்­குழு  அமைக்­கப்­பட வேண்டும்,  சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராய   விசேட சுயா­தீன ஆணைக்­குழு  தேவை, சமஷ்டி முறை­மை­யி­லான அதி­கா­ரங்­களை பகிரும் முறை வர­வேற்­கத்­தக்­கது,  சிறு­பான்மை பிர­தி­நித்­து­வங்­களை உறு­திப்­ப­டுத்தும் தேர்தல் முறை வேண்டும், சிறு­பான்மை மக்­களின் வழி­பாட்டுத் தலங்­க­ளையும்  பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை அவ­சியம் , சிறு­பான்மை மக்­களை பாது­காப்­ப­தற்­கான அர­சியல் எதிர்­பார்ப்பை அரசு வெ ளிக்­காட்­ட­வேண்டும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும்,  1990 ஆம் ஆண்டு புலி­க­ளினால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும், மேலும் கண்­டியன் சட்டம் தேச வழமைச் சட்டம் 1951 ஆம்  ஆண்டு முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்ட மூலங்கள் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு ஏற்ப திருத்­தப்­பட வேண்டும்,  குறிப்­பாக முஸ்லிம் விவாக மற்றும் விவ­கா­ரத்து சட்­ட­மூ­ல­மா­னது அந்த சமூ­கத்தின் கரி­ச­னை­யுடன் குறிப்­பாக முஸ்லிம் பெண்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் திருத்­தப்­பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் இலங்கைக்கு 10 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயா நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். 

இதன் போது முஸ்லிம்கள் தரப்பிலும் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் அவரைச் சந்தித்து முஸ்லிம் சமூகம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post