ஜனாதிபதி தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு இன்று வருகை தந்தார். இதில் விசேடம் என்ன வென்றால் அக்கரைப்பற்றுக்கு வருகை தரும் ஜனாதிபதியின் விஜயம் குறித்து உரிமை கோரப்பட்டு பல பேஸ்புக் அறிக்கைகைள் வெளியாகின, மு.கா வின் தேசியப்பட்டியலை அடுத்து பிரபலாக பேசப்பட்ட பேஸ்புக் ஜோக் இதுதான், இதற்காக பலரும் மீம்ஸ் களை யும் பதிவிட்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன வருகை தந்ததன் பிறகு சுகாதார அமைச்சர் ராஜிதவை பார்த்து சிரித்து ஒரு விசயம் சொல்லியுள்ளார். இங்கு பல லுாஸ் குறுாப்கள் இருக்கின்றனர் என்று, இதுகுறித்து சுகாதார அமைச்சர் ராஜிதவுக்கு ஏற்கனவே தெரியும். அவருடைய அமைச்சில் இந்த லுாஸ்களால் ஒரு சண்டையும் இடம்பெற்றது.
ஜனாதிபதி எளிமையானவர் அதே நிரலில் தான் இந்த விஜயமும் இடம்பெற்றது, ஜனாதிபதிக்கு நெருங்கிய அமைச்சர் தயாவின் நீண்ட நாள் கோரிக்கையான திகாமடுல்ல மாவட்ட துரித அபிவிருத்தியும் பிரதேச விஜயங்களும் இனிதே இன்று ஜனாதிபதியால் நிறைவேறியது.
தயவு செய்து ஜனாதிபதிக்கு நெருங்கியவர்கள், உடன் இருப்பவர்கள், ஒன்றாய் சாப்பிடுபவர்கள் என்று சொல்லும் லுாஸ் குறுாப்களிடம் ஏமாறாமல்,தொழிலுக்கு பணம் கொடுக்காமல் சிந்தித்து சுய புத்தியுடன் செயற்படுங்கள்