நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்
நீர் கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கல்விக்கான செயற்திட்டத்தின் முதற் கட்டமாக அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னேற்றம் கருதி அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் இணைந்து அவர்களின் வழிநடத்தலின் கீழ் இம்மாதத்தின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று 17ம் திகதி நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கு காலை 8.00 மணி முதல் 8.40 வரை தரம் 7,8,9 மாணவர்களுக்காக கல்வி கற்பதற்கான தடைகள் எவை என்பது பற்றியும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் உள்ளடக்கிய கருத்தரங்கொன்றும் 8.45 முதல் 9.45 வரை பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் தாய்மார்களுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து 10 மணி முதல் தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் வழிகாட்டல் கருத்தரங்கொன்று நடை பெற்றது.
இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு சுமார் 350ற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் வி ரிவுரையாளராக அஷ்ஷெய்கக அஸ்வர் அலி அவர்களும் கலந்து கொண்டார்.