Top News

பிற சமயத்தவர்களுக்கு இஸ்லாத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது - ஹக்கீம்



புதி­தாக பத­வி­யேற்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்ப் அரபு நாடுகள் மீது விதித்­துள்ள பயணக் கட்­டுப்­பா­டுகள் சர்­வ­தேச அரங்கில் சூடான பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

இந்த உத்­த­ரவை ஏற்­க­ம­றுத்த தலைமை வழக்­க­றி­ஞரை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பதவி நீக்கம் செய்­தி­ருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்ற சன்­மார்க்க சொற்­பொ­ழிவு நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அமைச்சர் அங்கு உரை­யாற்­றும்­போது மேலும் கூறி­ய­தா­வது,  அக­திகள் வரு­கையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்­துள்­ள­தாக கூறும் அமெ­ரிக்கா மீது, சம்­பந்த நாடுகள் தங்­க­ளது சக்­திக்­கேற்­ற­வாறு கவ­லை­யையும், கண்­ட­னத்­தையும், எதிர்ப்­பையும் வெளி­யிட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான தடை­களை எங்­க­ளது நாட்­டுக்கு செய்­து­விட வேண்டாம் என்று கெஞ்­சு­கின்ற பாணியில் சில நாடுகள் அமெ­ரிக்­கா­வுடன் பேசி வரு­கின்­றன.

உலக வல்­ல­ர­சாக பார்க்­கப்­படும் அமெ­ரிக்கா முஸ்­லிம்­களை ஒடுக்­கு­வதில் முனைப்புக் காட்­டி­வரும் இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில், அல்­குர்­ஆனில் கூறப்­படும் சில வச­னங்­க­ளுக்கு மாற்­று­ம­தத்­தினர் தவ­றான கற்­பி­தங்­களை புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

இஸ்லாம் அன்பை போதிக்­கின்ற, எதி­ரி­யாக இருந்­தாலும் அடைக்­கலம் கொடுக்­கின்ற கரு­ணை­யுள்ள மார்க்­க­மா­கவே இருக்­கின்­றது.

பிற சம­யத்­த­வர்­களால் பிழை­யாகப் புரிந்­து­கொள்­ளப்­பட்ட அல்­குர்ஆன் வச­னங்­க­ளுக்கு சரி­யான விளக்­கத்­தையும், தெளி­வையும் நாம் கொடுக்­க­வேண்டும். இங்கு அல்­குர்ஆன் விளக்­க­வுரை நிகழ்த்­திய, அஷ்ஷெய்க் அறபாத் (நளீமி) அது­பற்றி போதிய விளக்­கத்தை வழங்கினார்.

இந்த விளக்கங்கள் இஸ்லாத்தைத் தவறாக புரிந்துகொள்கின்ற சமூகத்தினர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வாறான உரைகள் எதிர்காலத்தில் நூலுருவில் கொண்டுவரப்படும் என்றார்.
Previous Post Next Post