ஷேக் மிஷாரி
முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று இன்று அரசியல் தலைவர்களாக இருக்கும் அமைச்சர் ரிசாத், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் மீது அதிருப்தி கொண்டு வெளியேறிய முன்னாள் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசனலி உள்ளிட்டோர் புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான இரகசிய சந்திப்பு இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த பசீர் சேகுதாவூத்,
தற்போதைய தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டே பலர் வெளியேறினர், இன்னும் வெளியேற காத்திருக்கின்றனர். இந்த முரண்பாடுகள் ஹக்கீம் என்ற தனி மனிதனால் உருவாக்கப்பட்டது. இன்று கட்சிக்குள் குடும்ப ஆட்சி, அவரின் தனிப்பட்ட பல பிரச்சினைகள், சமூகத்தை அடகு வைக்கும் செயற்பாடு இவையனத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் இதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும். அதிக முஸ்லிம்கள் வாழும் கிழக்கில் முஸ்லிம் தலைவர் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக அனைவரும் செயலாற்ற வேண்டும். தனித்து நின்று ஒன்றையும் சாதித்துவிட முடியாது இதற்காக ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடிக்க வேண்டும் என்றார்.
இன்று இடம்பெற்றJ முதல்கட்ட நிகழ்வுதான், இதற்கு பிறகு இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களை முகம்கொடுக்கவும் முஸ்தீபு எடுக்கப்பட்டது.