Top News

அறிஞர் சித்திலெவ்வை முதலாவது முஸ்லீம் சட்டத்தரணி சிங்கள பேராசிரியர் புகழாரம்

(அஷ்ரப் ஏ சமத்)

அறிஞா் சித்திலெப்பை ஆராய்ச்சி அமையத்தின்  120 வது நினைவு தின நிகழ்வு நேற்று(6) தெஹிவளை களுபோவில இலங்கை முஸ்லீம் பெண்கள் மாநாட்டு  மண்டபத்தில் அமைப்பின் தலைவா் சட்டத்தரணி மர்சூர் மெமளலானா தலைமையில் நடைபெற்றது. இலங்கை தேசிய சுதந்திரத்தில் அறிஞா் சித்திலெப்பை பங்கு பற்றி  களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ரோஹன லக்ஷ்மன் பியதாச பிரதான உரை நிகழ்த்தினாா். 

இந் நிகழ்வில் அமைப்பின் செயலாளா் பொறியியலாளா் நியாஸ். ஏ சமத், சர்வதேச விவகாரச் செயலாளா் டொக்டா் அகமட்லெப்பை றிஷி ஆகியோறும் உரையாற்றினாா்கள். 

இங்கு உரையாற்றிய பேராசிரியா் ரொஹான் - அறிஞா் சித்திலெப்பை 1 1838 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்தாா். அவா் முதலாவது முஸ்லீம் சட்டத்தரணியவாா். அவா் 1892ல் ஆண்டில் பாபிச்சிமரிக்காா், ஓராபி பாசா ஆகியோருடன் இணைந்து கொழும்பு சாஹிரா எனும் மத்ராசா என்ற பாடசாலையை ஆரம்பித்தாா். அத்துடன் அவரது சொந்த செலவில் கண்டி, கம்பொல, பொல்காவல, குருநாகல ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று பாடசாலைகளை ஆரம்பித்தாா், அவா் மும்மொழி வித்தகராகவும், சமுக சேவையாளா், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தாா். இந்த நாட்டின் பெரும்பாண்மை மக்கள் தமக்கென சுதந்திரத்திற்காக போராடி  உழைத்த அநாகரிக தா்மபால, மாட்டின் விக்கிரமசிங்க போன்றோா்கள் இன்றும் இலங்கை  மக்கள் பரம்பரையாக நினைவு கூரும் தலைவா்களாக அவா்களை வைத்துள்ளனா். ஆனால் அறிஞா் சித்திலெப்பை பற்றி முஸ்லீம் சமுகம் எதிா்கால பரம்பரையினா் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இதுவரை எவ்வித காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை. 

தமிழ் மொழியில 1882ல் முஸ்லீம் நேசன் எனும் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டிருந்தாா், அவா் அப்போதைய வெள்ளையா்  ஆட்சியின் அரசியல் அமைப்பிலும் அங்கத்துவம் வகித்தவா்.  அவா்  மறுமலா்ச்சியின் தந்தை, சமுகத்தின் வழிகாட்டி, அவரது வீடு இன்றும் கண்டி மகியாவையில் சித்திலெப்பை வீதியில் உள்ளது. என பேராசிரியா் தெரிவித்தாா். 




Previous Post Next Post