இன்று இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் என்ன கூடாது என குறிப்பிட்டார்.
மேலும் இன்று நாம் 69ஆவது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடுவதற்கு அன்று சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொருவரையும் நினைவில் கொள்வது எமது கடமையாகும்.
சுதந்திரதினம் என்பது ஒவ்வொருநாட்டின் யதார்த்தமாகும். உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றது. ஆனாலும், சுதந்திரம் என்ற சொல் ஒவ்வொரு நாட்டிலும் விசேட தன்மையுடையதாகவே காணப்படுகின்றது.
இதனடிப்படையில், 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நாம் அனைவரும் அரசியல், சமூக, பொருளாதார உறுபடுத்தலை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இதற்கான சந்தர்ப்பங்களை எமது எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
புதிதாக பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொக்க வேண்டும். எதிர்காலத்தில் திறமையான புத்திசாலிகளை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் முயற்சி செய்யவேண்டும். இதற்கு சமூக, ஜனநாயக ஒத்துழைப்பே முக்கியம்.
மேலும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில், தாய்நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.