முஸ்லிம்களின் தேசிய அரசியல் பலவீனமடைந்துள்ளமையால் முஸ்லிம் கூட்டமைப்பொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.
நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற சூழலில் தற்போது முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் குரல் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆரோக்கியமான கருத்துக்கள் முஸ்லிம் அரசியலில் பகிரப்படுவதாக இல்லை.
எனவே, கொள்கைகளால் கட்டமைந்த பலமானதொரு முஸ்லிம் கூட்டமைப்பினால் குரலெழுப்பவேண்டிய தேவைப்பாடு இன்று உருவாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தை விட முன்னர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மேலோங்கியிருந்திருந்த காலத்தில்தான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது தேவையில்லை, என்ற கருத்து பிழையான பார்வை.
மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்க காலத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு பல தடைகள் ஏற்பட்டன. இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அந்த அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அத்துடன் சர்வதேச அழுத்தங்களையும் கண்டுகொள்ளவில்லை. புதிய அரசியலமைப்பை திருத்துவது குறித்தும் எவ்விதமான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், இன்று நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகளிலும் இறங்கியுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் பலமான முஸ்லிம் கூட்டமைப்பின் அழுத்தம் அவசியப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2000 ஆம் ஆண்டு நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்க எத்தனித்தபோது அதில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பல முன்மொழிவுகளை வைத்தார்.
இதன்போது முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் அஷ்ரபினூடாக உள்வாங்கப்பட்டன. ஆனால் இன்றைய நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.
ஒரு கட்சியிலிருந்து பிரிந்தே இதர கட்சிகள் உருவாகியமையால் அவற்றை மீள இணைக்க முடியாதென்பதும் தவறானதொரு கருத்தாகும். பன்மைத்துவ தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒரு கட்சியில் ஒற்றுமையாக இருந்தோம். கட்சி பிளவுபட பன்மைத்துவ தலைமைத்துவம் இல்லாமல் போனதே காரணமாகியது. பன்மைத்துவ தலைமைத்துவத்துடன் மீண்டும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றுபடுத்தலாம். இதில் பரிபூரணமான நம்பிக்கை இருக்கிறது.
நான் பல தரப்புகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். முஸ்லிம் கூட்டமைப்பையே சகல தரப்பினரும் விரும்புகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கட்சிகள் வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதுபோன்று மக்கள் முஸ்லிம் கூட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும் என இன்று சிந்திக்க தொடங்கியுள்ளனர். எனவே இந்த நிலைப்பாட்டிற்கு அரசியல் கட்சிகள் விரும்பியோ விரும்பாமலோ இணங்க வேண்டி ஏற்படும். நாம் தொடர்ந்து மக்களை தெளிவுபடுத்தி வருகிறோம்.
கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து அ.இ.ம.கா. மற்றும் தேசிய காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். அவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
நாம் வாக்கு வசூலிப்பதற்கானதொரு கூட்டமைப்பை ஏற்படுத்த முனையவில்லை. இதயசுத்தியுடன் முஸ்லிம் சமூகநல நோக்குடன் பரஸ்பர புரிந்துணர்வுடனாக கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்த கூட்டமைப்பையே ஏற்படுத்த விரும்புகிறோம்.
சாத்தியப்படாது : சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட்

முஸ்லிம் கூட்டமைப்பென்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. மக்கள் செல்வாக்குள்ள முஸ்லிம் கட்சிகளும் நபர்களும் இல்லாமல் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதில் பயனில்லை.
முஸ்லிம் கட்சிகள் ஒவ்வொன்றும் அடுத்த கட்சிகளை விமர்சித்தும் எதிர்த்துமே அரசியல் செய்கின்றன. முரண்பாடானதொரு நிலையில் எப்படி இவர்களை ஓரணியில் திரட்டுவதென்பது பெரிய கேள்விக்குறியாகும். எனவே இது ஒருநாளும் சாத்தியமாகாது என்றே குறிப்பிட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று பலமானதொரு கூட்டமைப்பொன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அது கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.
இவ்விடயம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தான் பிரஸ்தாபித்து வருகின்றார். அவருடைய செயற்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் அதிருப்தியானதாக இருந்தமையினால் ஒன்றுபடுவதற்கான சாத்தியங்கள் குறைவானதாகும்.
நல்லதொரு கூட்டமைப்புக்கான முயற்சியொன்றையே எதிர்பார்க்கிறேன்.
வரவேற்கிறோம் : எஸ்.சுபைர்தீன் செயலாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
உளத்தூய்மையானதொரு கூட்டமைபை நாம் வரவேற்கிறோம். கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் களையப்பட்டு அனைவரும் ஒன்றுபடல் வேண்டும்.
எமது கட்சி இதுவரையிலும் இவ்விடயத்தில் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை.
எனினும், சிறுபான்மையினர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றிணையவேண்டிய தேவை இருக்கிறது.
முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பலகுழுக்களாக பிரிந்து காணப்படுகின்றது. அவற்றை ஓரணியில் திரட்டுவதன்மூலம் ஒரு சக்திமிக்க அரசியல் பலத்தை பெறலாம்.
அவரவர் தனித்துவத்தை பாதுகாத்து அடையாளங்களையும் பேணி முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஓரணியில் திரள்வது வரவேற்கத்தக்கது.
உருவாக்க வேண்டியது அவசியம் : முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த மூன்று கட்சிகள் இருந்தபோதும் அவை எதுவும் இதுவரை வடக்கு, கிழக்கு முஸ்லிம் தேசியம் தொடர்பான எதுவித தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காது நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த வேளையில் தமிழ் பேசும் மக்களின் ஓர் அங்கமான வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பரவலாக்க ஏற்பாடான சமஷ்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தது எமது முஸ்லிம் தேசிய முன்னணிதான்.
இன்று வடக்கு, கிழக்கு முஸ்லிம் தேசியத்தின் இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்மொழிவை ஒன்றிணைந்து செய்வதற்கு சமூகப்பற்றுள்ள தனிநபர்களும் கட்சிகளும் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது வேறு பெயர்களில் கட்சிகளை ஆரம்பிப்பதோ அடுத்துவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் போன்றவற்றில் பிரதிநிதித்துவங்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக, அதிகமாக பெறுவதற்காக அன்றி வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் நிரந்தரமான அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதமளிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் நோக்கத்தையே முதலில் கொண்டதாக இருக்கும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கொள்கை அடிப்படையிலான கூட்டமைப்பையே ஆதரிப்போம் : நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையிலான கூட்டமைப்பொன்றுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உடன்படுகிறது.
வெறுமனே பதவிகளுக்காகவும் சுயநலன்களுக்காகவும் இந்தக் கூட்டமைப்பு இருக்குமானால் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து ஹஸனலி ஆகியோர் நீக்கப்பட்ட பின்னரே தீவிரமாகப் பேசப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பலதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது எமக்குள் ஒரு கூட்டமைப்பு தேவைப்பட்டது. அப்போது தேவைப்படாத கூட்டமைப்பு இன்று ஏன் தேவைப்படுகின்றது என சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மக்கள் நலன்சார் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட கூட்டமைப்புடன் நாம் தயக்கமின்றி இணையத் தயாராக இருக்கிறோம். தற்போது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது. பொதுநலன்களை மையமாகக்கொண்ட கூட்டமைப்பொன்றில் இதயசுத்தியுடனான கூட்டமைப்பொன்றில் நாமும் இணைந்து செயற்பட பின்னிற்கப்போவதில்லை. (Vi-Ve)