ஐக்கிய தேசியக் கட்சியை தென்கிழக்கில் வளர்ப்பதே எனது இலக்கு; ஹிபாஸ் முஹம்மட்

NEWS


ஐக்கிய தேசியக் கட்சியை தென்கிழக்கில் வலுவடைய செய்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது, இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டன் என்ற அடிப்படையில் தான் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஹிபாஸ் முஹம்மட்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் போலியான அரசியல் முகவர்களும், அமைப்பாளர்களும் உலாவிக்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்கு அடிமட்ட தொண்டர்களாக இருந்தவர்கள் மறைவாக இருக்கின்ற காரணத்தினால் போலியான முகங்கள் உலாவ தொடங்கியுள்ளது, இதனை நிறுத்த வேண்டும் இதற்காகவே நேரடி அரசியலுக்குள் தான் வந்துள்ளதா கருத்துரைத்த ஹிபாஸ் ஐக்கிய தேசியக் கட்சியை தென்கிழக்கில் வளர்ப்பதே எனது இலக்கு என்று குறிப்பிட்டார்.

இதற்காக பிரத்தியேக அலுவலகம் அக்கரைப்பற்றில் விரைவில் திறக்க எண்ணியுள்ளதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதி்ல் விளக்கமளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top