Top News

தம்புள்ளையில் இனவாதிகள் குறிவைக்கும் பள்ளிவாசலும் வர்த்தகமும்




சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர்விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.






'இந்த குத்பா பிர­சங்கம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம­யத்தில் தம்­புள்­ளை­யி­லுள்ள பள்­ளி­வா­சலை சில அநி­யா­யக்­கா­ரர்கள் தகர்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த நேரத்தில் சிலர் மஸ்­ஜி­துக்குள் நுழைந்து மஸ்­ஜிதை உடைப்­ப­தா­கவும் அங்கு சிலர் அநி­யா­ய­மான  செயல்­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் மிக கவ­லைக்­கு­ரிய  தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது. நேற்று வரைக்கும் இதைத் தடுத்து நிறுத்த எங்­க­ளா­லான முயற்­சிகள் பல­வற்றைச் செய்தும் இன்று அங்கு இப்­படி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. 



நாம் இந்த அல்­லாஹ்வின் மாளி­கை­யி­லி­ருந்து கொண்டு இந்த நாட்டின்  தலை­வ­ரிடம்வேண்­டுகோள் விடுக்­கிறோம். அதற்­கு­ரிய தூதையும் நாம் அனுப்­புவோம். அல்­லாஹ்­வு­டைய மாளி­கையில்  கைவைக்க நீங்கள் எந்தக் கார­ணத்தைக் கொண்டும் உடந்­தை­யாக  இருக்கக் கூடாது.

சென்­ற­வாரம் நுவ­ரெ­லி­யாவில் ஒரு மஸ்­ஜிதைத் திறந்து வைத்த நீங்கள் உங்­க­ளு­டைய ஆட்­சியின் கீழ் உள்ள தம்­புள்­ளையில் ஒரு  மஸ்ஜித் தாக்­கப்­ப­டு­வதை எந்தக் காரணம் கொண்டும் அனு­ம­திக்கக் கூடாது. இதற்கு உட­னடியாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என  நாம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இந்த மிம்­ப­ரி­லி­ருந்து கேட்டுக் கொள்­கிறோம். நாங்கள் கல­வரம் உண்­டாக்­கு­ப­வர்கள் அல்லர்.

பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வர்கள் அல்லர்.  நியாயம் பேசக்­கூ­டி­ய­வர்கள்.' தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி  வெள்­ளிக்­கி­ழமை  இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த போது கண்டி லைன் பள்­ளி­வா­சலில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி ஆற்­றிய  ஜும்ஆ பிர­சங்­கத்தின் ஒரு பகு­தியே இது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  ஐந்து  வரு­டங்கள் அண்­மித்­து­விட்­டன. ஆனால் தம்­புள்ளை  பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. 

கடந்த அர­சாங்­கத்தின் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்  காலத்தில் நாடெங்கும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் மலிந்து காணப்­பட்ட சூழ்­நி­லையில்  தான் தம்­புள்ளை  பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது. தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை அதி­பதி ஆனந்த சுமங்­கல தேரர் தாக்­குதல் நடத்­திய குழு­வுக்கு தலைமை தாங்­கினார். பள்­ளி­வாசல் மிம்பர் மற்றும் குர்ஆன் பிர­திகள் உட்­பட பல பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டன. 

அன்று வெள்­ளிக்­கி­ழமை பள்­ளி­வா­சலை தாக்­கிய குழு­விற்குத் தலைமை தாங்­கிய  இனா­ம­லுவே தேரர்  முற்­பகல் 1.15 மணிக்குப் பிறகு இவ்­வாறு கூறி குழு­வி­ன­ருடன் விடை­பெற்றுச் சென்றார். 'எந்­த­வொரு  முஸ்­லிமும் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் இந்த இடத்தில் மல­சல கூடத்தைக் கூட உப­யோ­கிக்க முடி­யாது. நாட்டின் பிர­தான சிங்­கள பௌத்த  மக்­க­ளுக்கு இத­னூ­டாக  உறு­திப்­ப­டுத்­து­கிறோம்.  தற்­கா­லி­க­மாக இந்த இடத்தை  விட்டு விடை­பெ­று­கிறோம். மீண்டும் வருவோம்' என்று கூறிச் சென்றார். 

அன்று ஜும் ஆ தொழு­கையை நடத்­து­வ­தற்கு அவர்கள் இட­ம­ளிக்­க­வில்லை. 
உலமா சபை தலை­மை­ய­கத்தில் கூட்டம் 
தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்ட மறு­தினம் சனிக்­கி­ழமை  அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின்  தலைமைக் காரி­யா­ல­யத்தில் முக்­கிய கூட்டம் ஒன்று நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் முஸ்லிம்  அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உல­மாக்கள்,  முஸ்லிம் சிவில் அமைப்­புகள் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். அன்று கூட்­டத்தில்  எட்டுத் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவற்றில் 4 தீர்­மா­னங்கள் மிகவும் முக்­கியம் வாய்ந்­த­தாகும். 

* அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இச் சம்­ப­வத்தைக் கண்­டித்து கையொப்­ப­மிட்ட  கடிதம்  ஒன்­றினை  ஜனா­தி­பதி மஹிந்த  ராஜபக் ஷவிற்கு அனுப்பி வைத்தல்.

* பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்தைக் கோருதல், இல்­லையேல் அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தினை நாடுதல். 

* தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் அர­சியல்வாதி­களும் சமூக அமைப்­பு­களும்  தனித்து நின்று  செயற்­ப­டாமல் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா தலை­மையில் கூட்­டாக இயங்­குதல். 
* பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கோ வேறு இடத்தில் நிர்­மா­ணிக்­கவோ அனு­ம­திக்கக் கூடாது என்­ப­னவே முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள். 

இதே­வேளை,  அகில இலங்கை  ஜம் இய்­யத்துல் உலமா சபை  உட­ன­டி­யாக  ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தது. இவ்­வி­வ­கா­ரத்தில்  உட­ன­டி­யாகத் தலை­யிட்டு தீர்வைப் பெற்­றுத்­த­ரு­மாறும் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­போ­ருக்கு எதி­ராக  நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வேண்­டுகோள் விடுத்­தது. 
கூட்­டத்தின் தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது?
தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமார் ஐந்­து­வ­ருட கால­மாக தீர்வு பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை.  மஹிந்த  ராஜபக் ஷவின்  ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு  அநி­யாயம்  நடக்­கி­றது.  நல்­லாட்­சியை அமைத்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்று ஆட்­சி­பீ­ட­மே­றிய எமது அமைச்­சர்கள் மௌனி­க­ளா­கி­விட்­டனர். தேர்­தலில் வெற்றி இலக்கை எய்­து­வ­தற்கு தம்­புள்ளை பள்­ளி­வா­சலை கருப்­பொ­ரு­ளாகக் கொண்­டார்கள். 

2012 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உல­மா­ச­பையும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் அமைப்­பு­களின்  பிர­தி­நி­தி­களும் நிறை­வேற்­றிய தீர்­மா­னங்கள் கிடப்பில் தான் போடப்­பட்­டன என்று கூற வேண்டும். 
பள்­ளி­வாசல்  மீது  தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்கள்  இன்றுவரை  இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும்  மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

இவ்­வி­வ­கா­ரத்தில் எமது அர­சி­யல்­வா­தி­களும் அமைப்­பு­களும் அகில இலங்கை  உல­மா­ச­பை­யுடன் இணைந்து  அதன் தலை­மையில் செயற்­ப­ட­வில்லை.  தனித்து நின்றும் செயற்­ப­ட­வில்லை. கடந்த  5 வருட  கால­மாக  தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்குத் தீர்வு  பெற்­றுத்­த­ருவோம்.  ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்குப் பொறுப்­பான  அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம் என்று ஊட­கங்­க­ளுக்கே கருத்­து­களைத் தெரி­வித்து வந்­துள்­ளார்கள். இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கோ வேறு இடத்தில் நிர்­மா­ணிக்­கவோ அனு­ம­திக்கக் கூடாது என்ற  தீர்­மா­னமும்,  கடந்த 5  வரு­ட­கா­லத்­துக்குள் மாற்­றத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பள்­ளி­வா­சலை அகற்றிக் கொள்ள முடி­யாது என்று அன்று வீர­வ­சனம் பேசிய எமது தலை­வர்கள் காலப்­போக்கில் பள்­ளி­வா­ச­லையே மறந்து விட்­டார்கள்;  மௌனித்து விட்­டார்கள்.  இந்­நி­லையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இனங்­க­ளுக்­கி­டையில்  நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்டும் என்ற வகையில் பள்­ளி­வா­சலை வேறோர் இடத்­திற்கு இட­மாற்றிக் கொள்­வ­தற்கு தகுந்த காணி­யொன்று வழங்­கப்­பட்டால் தாங்கள் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்­தது. 
நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை காணி ஒதுக்­கீடு 
அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் கீழ் இயங்கும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தற்­போது தம்­புள்ளை பள்ளி வாசல் அமைந்­தி­ருக்கும் இடத்­தி­லி­ருந்து  30 மீற்றர்  தூரத்­துக்­கப்பால் பள்­ளி­வா­ச­லுக்கு காணி­யொன்­றினை இனங்­கண்டு காணியை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­ மேற்­கொண்­டது. நகர அபி­வி­ருத்தி  அதி­கா­ர­சபை  இது தொடர்­பாக பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தது. 

கடி­தத்தில் பள்­ளி­வா­சலின் பதிவு, காணியின் அளவு,  வரை­படம், பள்­ளி­வா­சலின் யாப்பு,  முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரின் சிபா­ரிசுக் கடிதம் என்­பன கோரப்­பட்­டி­ருந்­தன. 

இத­னை­ய­டுத்து கடந்த ஜன­வரி 26 ஆம் திகதி  கொழும்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கும் வக்பு சபையின்  தலை­வ­ருக்­கு­மி­டையில்  கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. பள்­ளி­வாசல் நிர்­வாகம் வக்பு சபைத் தலை­வ­ரிடம் மகஜர் ஒன்­றி­ணையும் கைய­ளித்­தது. குறிப்­பிட்ட மக­ஜரின்  பிர­திகள் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டன. 

தற்­போது தம்­புள்­ளையில் அமைந்­தி­ருக்கும் பள்­ளி­வாசல் கழி­வ­றைகள் உட்­பட 41.49 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. வாகனத் தரிப்­பிடம் 30 பேர்ச்சில் அமைந்­துள்­ளது.

எனவே பள்­ளி­வா­ச­லுக்கு புதிய இடத்தில் 2 ரூட் காணி வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­தோடு பள்­ளி­வா­சலைச் சூழ தற்­போது வாழ்ந்­து­வரும் தமிழ், முஸ்லிம், சிங்­களம் ஆகிய மூவி­னங்­க­ளையும் சேர்ந்த குடும்­பங்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லுக்கு ஒதுக்­கப்­படும் காணிக்­க­ரு­கிலே நிலம் வழங்­கப்­பட வேண்டும்.  அவ்­வாறு வழங்­கப்­பட்­டாலே நாம் தற்­போ­தைய பள்­ளி­வா­சலை புதிய இடத்­துக்கு இட­மாற்றிக் கொள்வோம் என மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக­ஜரின் பிரதி பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது. 

பள்­ளி­வா­சலை  வக்பு சபை தனது நிதி­யி­லி­ருந்தே நிர்­மா­ணித்துத் தர வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வாகம் வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி  எஸ்.எம்.எம்.யாசீ­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­மையும்  குறிப்­பி­டத்­தக்­கது. 
அமைச்சர் சம்­பிக்க – பள்ளி நிர்­வாகம் சந்­திப்பு
 பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி  அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கடந்த 14 ஆம் திகதி  பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கு­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு பள்­ளி­வாசல்  நிர்­வா­கத்­தி­ன­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார். கலந்­து­ரை­யாடல் பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர்  சம்­பிக்க ரண­வக்­கவின் அமைச்சுக் காரி­யா­ல­யத்தில் அவ­ரது தலை­மையில் நடை­பெற்­றது. 

இக்­க­லந்­து­ரை­யா­ட­லுக்கு தம்­புள்ளை விகா­ரையின் அதி­பதி ஸ்ரீ ராஹுல தேரரும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். பள்ளிவாசல் நிர்­வாக சபையின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ், நிர்­வாக சபை உறுப்­பினர் ரஹ்­மத்­துல்லா ஆகியோர் கலந்து கொண்­டனர். 
பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதிய இடத்தில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு 80 பேர்ச் காணி வழங்­கப்­ப­ட­வேண்டும் என அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தது என்­றாலும் தற்­போது பள்­ளி­வாசல் 20 பேர்ச்  காணி­யிலே அமைந்­தி­ருப்­ப­தாகக் கூறிய அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க 20 பேர்ச் காணியே வழங்­கலாம் எனத் தெரி­வித்­துள்ளார். 

பள்­ளி­வாசல் வாகனத் தரிப்­பிடம் உட்­பட  தற்­போது 80 பேர்ச் காணியை உள்­ள­டக்­கி­யி­ருப்­பதால் 80 பேர்ச் காணியே வழங்­கப்­பட வேண்டும். இது தொடர்­பாக முஸ்லிம் கட்­சி­களின் அர­சியல் தலை­வர்கள் ஒரு­மித்து குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைத்துக் காரி­யங்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கமே  பார்த்துக் கொள்­ள­வேண்டும் எனக் கரு­து­வது தவிர்க்­கப்­பட வேண்டும். பள்­ளி­வாசல், பள்ளி நிர்­வா­கத்தின் சொத்­தல்ல. அது சமூ­கத்தின் சொத்து என்­பதை  உணர வேண்டும். 
முஸ்லிம்  எம்.பி.க்களின் கலந்­து­ரை­யாடல் 
பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் உரிய காணியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்று கூடி கலந்­து­ரை­யாடி பின்பு ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தாகத் திட்­ட­மிட்­டுள்­ளார்கள். 

திட்­ட­மிட்டு பல வாரங்கள் கடந்து விட்­ட­போதும்  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் பள்­ளி­வா­ச­லுக்­காக ஒன்­றி­ணை­வ­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வி­வ­கா­ரத்தின் முக்­கி­யத்­துவம் கருதி அவர்கள் ஒன்­றி­ணைந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது. 
 
முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ள்  இலக்கு 

தம்­புள்ளை நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் உண­வகம் ஒன்றில் கடந்த 8 ஆம் திகதி மாலை இடம்­பெற்ற  தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து முஸ்லிம் கடைகள்  பெரும்­பான்மை இனக்­கு­ழு­வொன்­றினால் இலக்கு வைக்­கப்­பட்டு மூன்று தினங்கள் மூடப்­பட்­டமை தம்­புள்ளை முஸ்­லிம்­களை பெரும் பீதிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துடன், தம்புள்ளையில் முஸ்லிம்களின் வர்த்தகத்தையும்  பெரும்பான்மை இனத்தவர்கள் குறிவைத்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான  உணவகம் ஒன்றில் பெரும்பான்மையின வாடிக்கையாளர் ஒருவருக்கு அவர் ஆடர் செய்த இரு கிளப் சேன்ட்விச்சுக்குப் பதிலாக இரு சப்மரீன்களை வழங்கியமையே பிரச்சினை உருவாகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.

பெரும்பான்மை இனத்தவர் தனக்கு தவறாக  வழங்கப்பட்ட சப்மரீன்களை திருப்பிக் கொடுத்த போது  உணவகத்தின் முகாமையாளருக்கும் அவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தாக்குதலில் முற்றுப்பெற்றது. 

காயங்களுக்குள்ளான இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது நீதிவான் அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் கடந்த 22 ஆம் திகதியே நீதிவானின் கடும்  எச்சரிக்கையின் பின்பு தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

முஸ்லிம் கடைகளை மூடிவிடும்படி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவொன்று அச்சுறுத்தியதையடுத்தே கடைகள் மூடப்பட்டன. இதேவேளை இந்தக் கடைகளை மூடிவிடும் படி  அச்சுறுத்திய குழுவினருக்கு எதிராக பொலிஸார்  எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சமா­தான முயற்சி
 முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான உண­வ­கத்தில் ஏற்­பட்ட கைக­லப்­பி­னை­ய­டுத்து விளக்­க­ம­றி­யலில்  வைக்­கப்­பட்ட உண­வ­கத்தின் முகா­மை­யா­ளரும், பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளரும் சமா­தா­ன­மாக பிரச்­சி­னையை தீர்த்துக் கொள்ள  விரும்­பி­னார்கள். 

ஆனால் இரு­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் போது சமா­தான முயற்சி  மேற்­கொள்­ளப்­பட முடி­யாது என தம்­புள்ளைப் பொலிஸார் தெரி­வித்­தனர். வழக்கு விசா­ரணை நடை­பெறும் போதே இது தொடர்­பாக மனுத்­தாக்கல் செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் கூறினார். 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட  இருவர் தொடர்­பிலும் பொலிஸார்  நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையின்படி விளக்­க­ம­றி­யலில் இருக்கும் போது  சமா­தான முயற்­சியில் ஈடு­பட முடி­யா­தென தம்­புள்ளை  பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி  சி.ஐ.விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். 
பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முஸ்லிம் கவுன்ஸின் முறைப்­பாடு
 தம்­புள்ளை நகரில் உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட மோதல் சம்­ப­வத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் அப்­பி­ர­தேச பொலிஸார் அசி­ரத்­தை­யாக செயற்­பட்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்­களை மூன்று நாட்கள் தொடர்ச்­சி­யாக மூடச் செய்­வ­தற்கு உடந்­தை­யாக  இருந்­த­தா­கவும் குறிப்­பிட்டு தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் அனுப்பி வைத்­துள்ள முறைப்­பாடுக் கடி­தத்தின்  பிர­திகள் ஆணைக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல  ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதிபர் ஆகி­யோ­ருக்கு  அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. 
முறைப்­பாட்டுக் கடி­தத்தில் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது;
கடந்த 8 ஆம் திகதி முஸ்லிம்  ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான உண­வ­கத்தின் முகா­மை­யா­ள­ருக்கும், வாடிக்­கை­யா­ள­ருக்கும்  இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் பின்னர் மோத­லாக மாறி­யுள்­ளது. இதன் போது, குறித்த வாடிக்­கை­யாளர் தரப்பைச் சேர்ந்த  சுமார் 25 பேர்­கொண்ட  கும்பல் உண­வ­கத்தின் முகா­மை­யா­ளரை  கடு­மை­யாகத் தாக்­கி­யுள்­ளது. இச்­சம்­ப­வத்தில் இருவர் கைது செய்­யப்­பட்டு சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை  இந்தச் சம்­ப­வத்தை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்ட அப்­ப­கு­தியைச் சேர்ந்த இன­வாதக் குழு­வொன்று தம்­புள்ளை நக­ரி­லுள்ள அனைத்து முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் மூடு­மாறு வற்­பு­றுத்­தி­யுள்­ளது. இதற்­க­மைய முஸ்லிம்  வர்த்­த­கர்கள் தமது கடை­களை  மூன்று தினங்கள்  தொட­ராக மூடு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.  பல­வந்­தப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

 இது தொடர்­பாக  முஸ்­லிம்­களால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்ட போதிலும் பொலிஸார் எவ்­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. 
தம்­புள்­ளையில் அண்­மைக்­கா­ல­மாக இன­வாத சக்­திகள் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி வரு­வதைத் தாங்கள் அறி­வீர்கள். அந்த வகையில் மேற்­படி சம்­பவம் தொடர்­பிலும் முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்­பிலும் உரிய விசா­ர­ணை­களை நடத்­து­மாறும், எதிர்­கா­லத்தில்  இவ்­வா­றான இன­வாத சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறும் வேண்டிக் கொள்­கிறோம் என கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

பொலிஸ் ஆணைக்­குழு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் முறைப்­பாடு தொடர்பில் என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளப் போகி­றது என்­பதைப் பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். 
தம்­புள்­ளையில் கையெ­ழுத்து வேட்.டை
தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இடத்தில்  நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க 20 பேர்ச் காணி வழங்­கு­வ­தற்கு உறுதி வழங்­கி­யுள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து கடந்த 19 ஆம் திகதி தம்­புள்ளை நகரில் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத் திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

தம்­புள்­ளையில் தொழுகை மண்­டபம் நிர்­மா­ணிப்­ப­தற்கு எதி­ராக ஒரு இலட்சம் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத்­திட்டம் என நகரில் பதா­தைகள், சுவ­ரொட்டிக் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு கையொப்­பங்கள் சேக­ரிக்­கப்­பட்­டன. 

தம்­புள்ளை  பொரு­ளா­தார மையம், கெக்­கி­ராவ பஸ் நிலையம், பொதுச்­சந்தை, கடி­காரச் சந்தி ஆகிய பகு­தி­களில் கையொப்­பங்கள் சேக­ரிக்­கப்­பட்­டன.  பௌத்த தேரர்­களும் இந்தப் பணியில்  ஈடு­பட்­டி­ருந்­தனர். 

எமது அர­சியல் தலை­வர்­களும் உலமா சபையும் சிவில் சமூக அமைப்­பு­களும், புத்தி ஜீவி­களும் ஐந்து வருட கால­மாக மௌனம் காத்­த­தி­னாலே இன்று நிலைமை இந்­த­ள­வுக்குப் பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போ­தைய  ஜனா­தி­பதி வெற்­றி­யீட்டி பத­வி­யேற்று சில வாரங்­களின் பின்பு ஒரு ஊட­கங்க சந்­திப்பில் அவ­ருடன்  உரை­யாடும் வாய்ப்பு எனக்குக் கிட்­டி­யது. 

அன்று அவ­ரிடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு எப்­போது தீர்வு வழங்­கப்­போ­கி­றீர்கள் என்று வின­வினேன். பொதுத்­தேர்தல் முடிந்த கையோடு  தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு சுமுக தீர்வு வழங்­கப்­படும் என்று அவர் பதி­ல­ளித்தார்.  ஜனா­தி­பதி பத­வி­யேற்று இன்று இரண்டு வரு­டங்கள் கடந்து விட்­டது. ஆனால் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மறந்து போய்­விட்டார். இந்தப் பிரச்­சி­னையை எமது அர­சியல் தலை­வர்கள் தான் மீண்டும் ஞாப­கப்­ப­டுத்த வேண்டும். 
இறுதி எச்­ச­ரிக்கை  துண்டுப் பிர­சுரம் 
தம்­புள்ளை நக­ரி­லுள்ள முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை என்று  குறிப்­பிட்டு தம்­புள்ளை நகரில் துண்டுப் பிர­சு­ர­மொன்றும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. 

வியா­பாரம் செய்­வ­தென்றால் வியா­பாரம் செய்­யுங்கள். இல்­லை­யென்றால் பள்ளி இவ்­வா­றில்லா விட்டால் உங்­க­ளுக்கு ஒன்­று­மில்லால் போகும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்தத் துண்டும் பிர­சுரம் நீங்கள்  தம்­புள்­ளையில் வியா­பாரம் செய்­யுங்கள். ஆனால் பள்­ளி­வா­சலைக் கேட்­கா­தீர்கள். பள்­ளி­வா­சலைக் கேட்­ப­தென்றால் வியா­பாரம் செய்­யா­தீர்கள் என்ற பொருள்­ப­டவே  வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்று எண்ணத் தோன்­று­கி­றது. 

உலமா  சபை­யுடன் பள்ளி நிர்­வாகம் சந்­திப்பு
 தம்­புள்ளை முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும்  பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடுக்­கப்­படும் சவால்கள் தொடர்பில் உல­மா­சபை பிர­தி­நி­தி­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை  பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யாடல்  ஒன்று இடம்­பெற்­றது. 

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்சி வசப்­பட வேண்­டா­மெ­னவும், அமைதி காக்கும் படியும், அல்­லாஹ்­விடம்  துஆ கேட்­கும்­ப­டியும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்  அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

இச்­சந்­திப்பு கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் இடம்­பெற்­றது. தம்­புள்­ளையில் யார், யாரெல்லாம் ஒரு இலட்­ச­மல்ல ஒரு­கோடி கையொப்­பங்கள்  சேக­ரித்­தாலும் எம்மை ஒன்றும் செய்து விட முடி­யாது. முஸ்­லிம்கள் இந்­நாட்­ட­வர்கள். அவர்­க­ளுக்கு இங்கே  சகல உரி­மை­களும் இருக்­கின்­றன. உலமா சபை  முஸ்­லிம்­களை இறை­வ­னிடம்  கையேந்­து­மாறு கேட்­கி­றது. 

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். அவர்கள் நாட்டின் தலை­வ­ருடன் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுத் தரு­வார்கள். நாம் அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது. நிதானம் இழக்­கக்­கூ­டாது என்றும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இந்­நி­லையில்  எத்­தனை வரு­டங்கள் தான் முஸ்­லிம்கள் பொறுமை காப்­பது. நிதானம் இழக்­கா­ம­லி­ருப்­பது என்று சமூ­கத்தில் பலர் வினா எழுப்­பா­ம­லு­மில்லை. 
பள்­ளி­வா­ச­லுக்கு காணி பெறு­வது எமது உரிமை 
வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்­துள்ள கருத்­துகள் வர­வேற்கக் கூடி­ய­ன­வாக அமைந்­துள்­ளன. தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை  வேறோர் இடத்­துக்கு இடம் மாற்றிக் கொள்­வ­தென்றால் உரிய காணி பெற்­றுக்­கொள்­வது எமது உரி­மை­யாகும்.

 பள்­ளி­வாசல் வக்பு சொத்­து­களைப்  பாது­காப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் மௌனம் காக்­கக்­கூ­டாது. சட்ட ரீதி­யான உரி­மைக்­காக போராட வேண்டும் என அவர் தெரி­வித்­துள்ளார். 

வக்பு சபை இவ்­வி­வ­கா­ரத்தில் தனது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­மெ­னவும் உறு­தி­ய­ளித்­துள்ளார். பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர  அபி­வி­ருத்தி அதி­கார சபை, அமைச்சர் ஹலீம்  ஆகி­யோரைச் சந்­தித்து அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும். அவ்­வா­றில்­லையேல் எமது உரிமைகளைப்  பெற்றுக் கொள்ள முடியாமற் போகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிவாசல் நிர்வாகம் விட்டுக் கொடுப்புகளைச் செய்யக் கூடாது எனவும்  கூறியுள்ளார். 
நீதிவானின் எச்சரிக்கை 
தம்புள்ளை உணவகத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடர்பில்  14 நாட்கள் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த இருவரையும்  தம்புள்ளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கடந்த 22 ஆம் திகதி தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார். 

அவர் உணவகத்தின்  முகாமையாளரை யும் வாடிக்கையாளரான பெரும்பான்மை சமூகத்தவரையும்  எச்சரித்தே விடுதலை செய்தார். வியாபாரம் செய்யும் போது வாடிக்கையாளருடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மோதல்களில் ஈடுபடக்கூடாது. மீண்டும் இவ்வாறான  சம்பவங்கள் இடம்பெற்றால் கடமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.    மோதல்களை தவிர்த்து சமாதானமாக அனைவருடனும்  அன்புடன் வாழும் படியும் அறிவுரை கூறினார்.
தம்­புள்ளை நகரம்
தம்­புள்ளை நகரில் 105 முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் அமைந்­துள்­ளன. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த வர்த்­த­கர்கள் அதி­க­ளவில் வாழ்­கி­றார்கள். தம்­புள்ளை ஓர் வர்த்­தக மையம் என்­பதால் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்து உற்­பத்திப் பொருட்­களும் விவ­சாயப் பொருட்­களும் இம்­மை­யத்தை வந்­த­டை­கின்­றன.

வர்த்­தகப் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­கா­கவும் பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்கள் தினம் இங்கு வந்து செல்­கி­றார்கள்.

இங்­குள்ள ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 1960 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும் என்­றாலும் தம்­புள்ளை கந்­தமை சந்­தியில் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டது இன்று நேற்­றல்ல.

1902 ஆம் ஆண்டு வியா­பார நோக்கம் கருதி தம்­புள்ளை நக­ருக்கு வந்த கிழக்­கி­லங்கை காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து உதுமான் சாஹிப் கச்சி முஹம்மத் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யோடு தம்­புள்­ளையில் முஸ்­லிம்­களின் வணக்க வழி­பாடு ஆரம்­ப­மா­னமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 1960 இல் கந்­த­ள­மையில் மஸ்­ஜிதுல் ஹைரியா பள்­ளி­வாசல் பெயர் எது­வு­மின்றி சிறிய அறைக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அதற்குப் பின்பு இப்­பள்­ளி­வாசல் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அதன் பெயர் உல­கெங்கும் பிர­சித்­த­மா­கி­விட்­டது என்­றாலும் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்­கான தீர்­வுகள் மந்த கதி­யி­லேயே தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.


எமது சமூக, அர­சியல் தலை­வர்­களும் சிவில் அமைப்­பு­களும் இவ்­வி­கா­ரத்தில் மும்­மு­ர­மாக செயற்­ப­டா­மையே இதற்கு காரணம் எனலாம். காலத்­துக்குக் காலம் ஊடக அறிக்­கை­க­ளுடன் அர­சி­ய­ல­வா­திகள் மௌன­மாகி விடு­கி­றார்கள். 

இச்­சந்­தர்ப்­பத்தில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை வழங்கியுள்ள அறிவுரையின்படி உணர்ச்சிவப்படாது வக்பு சபையின் தலைவரின் அறிவுரையின் படி எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும். போராட்டங்களின்றி அமைதி காப்பதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது.

Previous Post Next Post