Top News

பொத்தானை நிலம் விடுவிப்பு; ஹனீபா மௌலவியின் முயற்சிக்கு வெற்றி



அஹமட்

தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிகப்பட்ட பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசல் நிலம் விடுவிப்பு.
மிக நீண்டகாலமாக வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வந்த பொத்தானை பிரதேசம் அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் போடப்பட்டதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மௌலவிக்கும், பொத்தானை பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.  நிலமைகளை ஆராய்வதற்கு நேரடியாக விஜயமொன்றினையும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தலைவர் மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்கவினுடனான கலந்துரையாடலின் பின்னர், தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பிலிருந்து பொத்தானை நிலம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொத்தானை பள்ளிவாசல் நிருவாகத்தினர் இவ்விடயம் தொடர்பில் சம்மபந்தப்பட்ட தரப்பினருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுள்ளனர்.
மேலும், பொத்தானை நில ஆக்கிரமிப்பு விடயத்தில் தமது கோரிக்கையினை கருத்திற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பளாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மௌலவி, நீர்வழங்கள் வடிகாலமைப்பு  அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எல். மர்ஜூன் ஆகியோர் நேரில் சென்று நன்றி தெரிவித்திருந்தனர்.


Previous Post Next Post