இவ்வாய்வுக்கட்டுரையானது பல பகுதிகளைக் கொண்டதாகும். இது இலங்கையில் சிறுவர்களுக்கு இஸ்லாத்தை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயனுள்ள ஆய்வாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் வாராந்தம் வியாழக்கிழமை தோறும் தொடர் கட்டுரையாக இதனை வெளியிடவுள்ளோம்.
முன்னுரை
21 ஆம் நூற்றாண்டு கல்வியின் ஒவ்வொரு துறையும் நன்கு வளர்ச்சியடைந்து வரும் காலப்பகுதியாகும். குறிப்பாக சிறுவர்களுக்கான கல்விப் போதனை பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகின்றது. இருந்த போதிலும், இலங்கையில் இஸ்லாமியக் கல்விப் போதனை முறை சிறுவர்களுக்கு மத்தியில் எவ்வித முன்னேற்றங்களுமின்றி பாரம்பரிய போதனை முறைமைகளைப் பின்பற்றியே பெரும்பாலான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கை சிறார்களுக்கு இஸ்லாமியக் கல்வியை வழங்குவதில் வீடு, அரசாங்கப் பாடசாலை மற்றும் முன்பள்ளிப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாம் பாடம், அல்குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யாப் பாடசாலை, இஸ்லாமிய நிறுவனங்கள், இயக்கங்கள் என்பவற்றின் சிறுவர் பிரிவுகள் போன்றவை பங்காற்றி வருகின்றன. எனினும் இவற்றில் அல்குர்ஆன் மத்ரஸாக்களே பிரதான பங்கினை வகிக்கின்றன.
இந்த அல்குர்ஆன் மத்ரஸாக்களில் ஆரம்ப காலம் தொட்டு பின்பற்றப்பட்ட பாரம்பரிய கலைத்திட்டமும், ஒழுங்கமைக்கப்படாத கல்விப் போதனா முறையும்தான் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது இலங்கையில் சுமார் 4000 இற்கும் மேற்பட்ட அல்குர்ஆன் மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன.
அப்படிப்பட்ட பாரம்பரிய அல்குர்ஆன் மத்ரஸாக்களினால் எமது இளம் சிறார்களை கவர முடியவில்லை. அவர்களின் விருப்புகளுக்கு இடம்கொடுக்கவும் முடியவில்லை.
இதனால் காலம் காலமாக அல்குர்ஆன் மத்ரஸாக்கள் வெறுமனே அல்குர்ஆனை நெட்டுருப்பண்ணும் ஒரு சந்ததியினரையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. தொழிநுட்ப, விஞ்ஞான மற்றும் உளவியல் துறைகளின் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் நிற்கும் சமகால சமூக தளத்தில் நமது பாரம்பரிய மத்ரஸாக் கல்விமுறை தோற்றுப்போய்விட்டது என்பது கவலைக்கிடமான உண்மையாகும்.
எனினும், அண்மைக் காலமாக இலங்கையில் ஆங்காங்கே அல்குர்ஆன் மத்ரஸாக்களுக்கான புதிய வேலைத்திட்டங்கள் (Syllabus) அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இயங்கும் பிரதான இஸ்லாமிய தஃவா அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் சில நவீன பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஆங்காங்கே சில நவீன அல்குர்ஆன் மத்ரஸாக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. எனினும் இந்த மத்ரஸாக்களிலும் கூட நவீன கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கற்பிப்பதற்கான ஒரு சில கற்பித்தல் உத்திகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இன்று சர்வதேச ரீதியில் கற்பித்தல்துறை என்பது பல முக்கியமான மைல் கற்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, அப்படியான கற்பித்தல் உத்திகளை இந்த அல்குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் அறிந்து அவற்றைப் பயன்படுத்துகின்ற போதுதான் உத்வேகமிக்க, உன்னத சிறுவர் சமுதாயமொன்றை கட்டியெழுப்ப முடியுமாக இருக்கும்.
மேலும், மிக அண்மையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட முழு இலங்கைக்குமான அல்குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டமும் 2012 ம் ஆண்டு ஜம்இய்யதுல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்தப் பாடத்திட்டமும் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளாகும்.
எனினும் அந்தப் பாடத்திட்டங்களிலும் கூட கற்பித்தல் உத்திகள் குறித்த மாணவர்களின் உளவியல் தன்மைகளுக்கேற்ப அப்பாடத்திட்டத்தை கற்பித்து அமுல்படுத்துவதற்கேற்ற வழிமுறைகள் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே இலங்கையில் சிறார்களுக்கு இஸ்லாத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் விசேடமான பயிற்றுவிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதேநேரம் இந்த ஆசிரியர்களுக்கான கற்பித்தல் உத்திகள், மாணவர்களின் உளவியல் பாங்குக்கேற்ப கற்பிக்கக் கூடிய கற்பித்தல் வழிமுறைகள் என்பன அடங்கிய ஒரு வழிகாட்டல் நூல் இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோன்று அல்குர்ஆன் மத்ரஸாக்கள் தவிர சிறுவர்களுக்கு இஸ்லாத்தைப் போதிக்கின்ற மற்றுமொரு இடமாக முன்பள்ளிகள் (Pre School) மற்றும் அரச பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாம் பாடத்தைக் குறிப்பிட முடியும். அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முஸ்லிம் பிரதேசங்கள் சிலவற்றில் நடைபெறும் அஹதிய்யா பாடசாலைகளும் இத்துறையில் கணிசமாகப் பங்காற்றுகின்றன. இலங்கையில் சுமார் 500 இற்கும் அதிகமான அஹதிய்யாக்கள் நடைபெறுகின்றன.
இதுதவிர இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்களின் கீழியங்கும் சிறுவர் பிரிவுகளிலும் வாராவாரம் சில இஸ்லாமிய வகுப்புகளின் மூலம் இஸ்லாம் கற்பிக்கப்படுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு சிறுவர்கள் வாழும் வீட்டிலும் பெற்றோர், பாதுகாவலர்களால் இஸ்லாம் ஓரளவு கற்பிக்கப்படுகிறது. எனினும் மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களிலும் கற்பிப்பதற்கான கலைத்திட்டம் (Syllabus), கற்பித்தல் சாதனங்கள் (Teaching Materials) என்பன காணப்பட்டாலும் வித்தியாசமான, சுவாரஷ்யமான. நவீனமான கற்பித்தல் உத்திகள் பயன்படுத்தப்படாமை, அதுபற்றிய தெளிவு இல்லாமை போன்ற காரணங்களால் சிறார்களுக்கு இஸ்லாத்தைக் கற்பித்தல் என்பது இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் அடைய வேண்டிய அடைவுகளை அடையவில்லை. இன்னும் தாண்ட வேண்டிய மைல்கற்கள் நிறையவே இருக்கின்றன.
சுருக்கமாக நோக்கினால் மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களிலும் கற்பிக்கப்படும் இஸ்லாம் பாடத்தினை ஒரு சில தலைப்புகளுக்குள் அடக்கிவிட முடியும்.
அல்குர்ஆன், அல்ஹதீஸ், பிக்ஹ், ஸீரா என ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்கு வித்தியாசமான, சுவாரஷ்யமான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. எனவே, அப்படியான கற்பித்தல் உத்திகளை இலங்கையில் இஸ்லாத்தைக் கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
மேலும் இஸ்லாம், இஸ்லாம் பாடத்தைக கற்பிப்பதை எப்படி வரவேற்றிருக்கிறது, இஸ்லாத்தைக் கற்பிப்போருக்கான வெகுமதிகள், இஸ்லாத்தைக் கற்பிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கையாண்ட கற்பித்தல் உத்திகள், மாணவர்களின் கற்றல் பாங்கு, உளநிலை என்பவற்றுக்கேற்ற கற்பித்தல் வழிமுறைகள், இஸ்லாத்தின் ஒவ்வொரு அலகுகளையும் கற்பிப்பதற்குப் பின்னாலுள்ள இலக்குகள், நடத்தை மாற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறைமை என்பவற்றை ஒவ்வொரு ஆசிரியரும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் மேற்கூறப்பட்ட விடயங்களை அல்குர்ஆன், ஸுன்னா, உளவியல் அடிப்படையில் விளக்குகின்ற ஓர் ஆய்வாக இவ்வாய்வு அமைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏற்கனவே இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குழந்தை வளர்ப்பு (தர்பிய்யதுல் அவ்லாத்) சம்பந்தமாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் அல்குர்ஆன் மத்ரஸாக்களை நவீனமயப்படுத்துவது தொடர்பான சில ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. ஆனால் இவ்வாய்வுகளில் கற்பித்தல் உத்திகள்; குறித்து விரிவாக ஆராயப்படவில்லை.
அறபுமொழியில் கற்பித்தல் உத்திகள் சம்பந்தமான பொதுவான பல நூல்கள் காணப்பட்டாலும் இலங்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு சிறார்களுக்கு இஸ்லாத்தைக் கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகள் குறித்த ஆய்வின் தேவை உணரப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் நோக்கம்
மனித வாழ்வின் விருத்திப் பருவங்களில் முதன்மையான பருவம் சிறுவர் பருவமாகும். எனவே, சிறுவர்களுக்கான இஸ்லாமிய கல்விப் போதனை வளமிக்கதாகவும், வலுவுடையதாகவும் கட்டியெழுப்பாதுவிடின் அச்சிறார்களின் இடைநிலைக் கல்வி, உயர்கல்வி என்பவற்றின் போதும் இஸ்லாம் அவர்களில் தாக்கம் செலுத்தாது போகும்.
எனவே, சிறுவர்களின் உடல், உள, சமூக, பண்பாட்டு விருத்திக் கோலங்களும் அவற்றோடு இடைவினை கொள்ளக் கூடிய கற்பித்தல் உத்திகளும் சிறுவர் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். “Development Disorder” எனும் விருத்தி நிலை ஒழுங்குக் குலைவு ஏற்படாவண்ணம் கற்பிப்பதற்கான கற்பித்தல் வழிமுறைகள் உபயோகிக்கப்பட வேண்டும்.
வெறுமனே ஒரு கலைத்திட்டத்தின் வெற்றி என்பது பாடப்பரப்புகளோடு சுருங்கிவிடுவதில்லை. மாறாக சிறுவர் உளவியல், கலைத்திட்ட விருத்தி, கற்பித்தலியல் நுட்பவியல்கள், வள ஆக்கங்கள், புலப்பாடுகளின் கணிப்பீடுகள், ஆசிரியத்துவ வாண்மை போன்ற விடயங்களிலும் தங்கியுள்ளன.
எனவே எதிர்காலத்தில் இஸ்லாத்தை வெறுமனே மனனமிட்ட ஒரு சந்ததியன்றி தமது அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஓர் உயரிய சிறுவர் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான ஓர் அடித்தளத்தை அமைப்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவைதவிர இன்னும் சில கிளை நோக்கங்களையும் இவ்வாய்வு கொண்டுள்ளது.
இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதன் அவசியத்தையும் இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதன் சிறப்புகளையும் முஅல்லிம் முஅல்லிமாக்களுக்கு உணர்த்துதல்.
கற்பிப்பது வெறுமனே ஒரு தொழில் என்பதற்கு அப்பால் அது ஓர் உயர்ந்த சமூகப்பணி என்பதை நிறுவுதல்.
இஸ்லாத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்கள் கையாண்ட கற்பித்தல் உத்திகளையும், அவர்களின் வழிகாட்டல்களையும் அறிமுகப்படுத்தல்.
Facilitative Teaching எனும் புதிய கல்விக் கொள்கையை இஸ்லாத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக அல்குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்களுக்கு அறிமுகப்படுத்தல்.
இதுவரை நடைமுறையிலிருக்கும் பாரம்பரிய மற்றும் நவீன கற்பித்தல் உத்திகளைக் கண்டறிந்து அதனைப் பட்டியற்படுத்தி அதிலுள்ள சாதக பாதகங்களைக் கண்டறிதல்.
மாணவர்களின் கற்றல் பாங்கு, கற்கும் விதம், கற்கும் இயல்பு என்பவற்றை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து அதற்கேற்ப மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகுவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.
இஸ்லாம் பாடத்தின் ஒவ்வொரு அலகையும் அதிலுள்ள கிளை அலகுகளையும் கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகளை அறிமுகம் செய்தல்.

ஆய்வுப் பரப்பும் அதன் எல்லையும்
இவ்வாய்வானது இலங்கையில் முஸ்லிம் சிறார்களுக்கு இஸ்லாத்தைக் கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகள் என்ற பொதுத் தலைப்பில் அமைந்திருந்தாலும் வெறுமனே கற்பித்தல் உத்திகளை மட்டும் இவ்வாய்வு உள்ளடக்காது. மாறாக அதனோடு தொடர்புடைய 5 அம்சங்களை ஆய்வுப் பரப்பாகக் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் கற்பித்தல், கற்பித்தல் உத்திகள், Facilitative Teaching போன்ற பதப் பிரயோகங்களை அறிமுகம் செய்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இஸ்லாத்தைக் கற்பிப்பதன் அவசியம், அதனது சிறப்புகள், கற்பித்தலில் நபியவர்களின் வழிகாட்டல்கள், ஆளுமை உருவாக்கத்தில் ஆசிரியர்களின் பங்களிப்புக்கான சில உதாரணங்கள் என்பவற்றை விளக்குவதாக இப்பகுதி அமைந்திருக்கும்.
அடுத்த பகுதியில் மாணவர்களின் கற்கும் திறன், கற்கும் விதங்கள் தொடர்பான உளவியல் ஆய்வொன்று முன்வைக்கப்பட்டு அந்த மாணவர்களின் உளப்பாங்குக்கு ஏற்ற கற்பித்தல் உத்திகளை பயன்படுத்துவதன் அவசியமும் ஆராயப்பட்டுள்ளது.
அடுத்த பகுதி கற்பித்தல் சாதனங்கள். கற்பித்தல் உத்திகள், நபியவர்கள் கையாண்ட கற்பித்தல் உத்திகள், ஆசிரியரின் பண்புகள் குறித்து பேசுகிறது.
ஐந்தாம் பகுதியே ஆய்வின் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் இஸ்லாம் பாடம் என்ற பொதுவான தலைப்புக்குள் உள்ளடங்கும் கிளை அலகுகள் ஒவ்வொன்றையும் தனியாக எடுத்து அவை ஒவ்வொன்றையும் கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகள், அவற்றைக் கற்பிப்பதனூடாக எதிர்பார்க்கப்படும் உள, நடத்தை ரீதியான இலக்குகள் என்பவற்றையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுப் பிரச்சினை
இன்றைய இலங்கையில் சுமார் 4000 அல்குர்ஆன் மத்ரஸாக்கள், 500 அஹதிய்யாக்கள் என்பன இயங்கி வந்த போதிலும் அவற்றினால் சிறுவர்களுக்கான போதிய கல்விப் போதனைகள் சென்றடையவில்லை. அதற்குப் பிரதான காரணம், மரபு ரீதியான கற்பித்தல் உத்திகளே அங்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகும்.
மேலும் நவீன தொடர்பாடல் சாதனங்களும், தொழிநுட்ப வசதிகளும் அதிகரித்துள்ள சமகால சூழலில் சிறுவர்களைக் கவரும் வகையில் பாடத்திட்டம் கற்பிக்கப்படாதுள்ளன. எனவே இஸ்லாம் பாடம் ஒரு புறக்கணிக்கப்பட்ட பாடமாக மாறியுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இஸ்லாம் பாடத்தை நவீன தொடர்பாடல், தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி எப்படிக் கற்பிக்கலாம் என்பது பற்றிய தெளிவின்மை காணப்படுகின்றது.
கற்பித்தலின் போது நபியவர்கள் காட்டித் தந்த சிறந்த கற்பித்தல் நுட்ப முறைகளும், கற்பித்தல் ரீதியான வழிகாட்டல்களும் கவனத்திற் கொள்ளப்படாதுள்ளன.
கற்பித்தலின் போது சிறார்களின் தனிநபர் வேறுபாடுகள், கற்கும் விதம், உளப்பாங்கு போன்ற உளவியல் அணுகுமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதாவது, எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான கற்பித்தல் உத்திகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மெல்லக் கற்கும் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
அத்துடன் ஆங்கிலம், கணினி வகுப்புகளில் நவீன மயப்படுத்தலால் கவரப்பட்டுள்ள சிறுவர்களை பாரம்பரிய மத்ரஸாக்கள், அஹதிய்யாக்களால் அவற்றுக்கு நிகராகக் கவரமுடியாமல் போயுள்ளது.
வீடுகளில் பெற்றோர்கள் இஸ்லாத்தைக் கற்பிக்கும் போது குழந்தைகளுக்கேற்ற வகையில் அவற்றை எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றிய தெளிவு பெற்றோருக்கு இல்லாமலிருக்கிறது.
சில நவீன குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலைத்திட்டம், நவீன கற்பித்தல் சாதனங்கள் என்பன இருந்த போதும் அவற்றைக் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் நவீன கற்பித்தல் உத்திகள் பற்றிய தெளிவின்மையாலும் அது குறித்த தொடர்ச்சியான வழிகாட்டல் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என்பவற்றின் மீது தங்கி நிற்க வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே, மேற்குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது.
அல்லாஹ் எம் அனைவரினதும் தூய பணிகளை ஏற்றுக் கொள்வானாக.