எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரிதேசியபாடசாலையின் இவ்வருடத்துக்கான இல்லவிளையாட்டுபோட்டியில் சீராஸி இல்லம் 316 புள்ளிகளைப்பெற்றுசம்பியனாகதெரிவுசெய்யப்பட்டுள்ளதாககல்லூரிஅதிபர் எம்.எம்.எம்.மீராசாஹிப் தெரிவித்தார்.
கல்லூரிமைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டஅக்கரைப்பற்றுவலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் 1ஆம் இடத்தைபெற்றுசம்பியனாகதெரிவுசெய்யப்பட்டசீராஸி இல்லத்துக்கானவெற்றிக்கிண்ணத்தைவழங்கிவைத்தார்.
308 புள்ளிகளைபெற்று கஸ்ஸாலி இல்லம் 2ஆம் இடத்தையும்,பிர்தொளஸி இல்லம் 239 புள்ளிகளைபெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.இல்லங்களுக்கானவெற்றிக்கிண்ணங்களைகல்லூரிஅதிபர்,விஷேட அதிதியாககலந்துகொண்டதென்கிழக்குபல்கலைக்கழகபிரயோகவிஞ்ஞானபிரிவுபீடாதிபதிகலாநிதி யூ.எல்.செயினுடீன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதேபோல் மரதன்,பெருவிளையாட்டுக்கள்,சுவட்டுநிகழ்ச்சிகள்,மைதானநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வெற்றிபெற்ற இல்லங்களின் மாணவர்களுக்குகிண்ணங்களையும்,சான்றிதழ்களையும் அதிதிகளாககலந்துகொண்டஅக்கரைப்பற்றுகோட்டக்கல்விஅதிகாரிகலீலுர் றகுமான்,வலயக்கல்விஅலுவலகஉடற்கல்விஉதவிக்கல்விபணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல்,பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருடன்; கல்லூரியின் பிரதிஅதிபர்களான யூ.எல்.மன்சூர்,எம்.இக்பால் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள்,பழையமாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.