முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஹக்கீம் மற்றும் தாருஸ்ஸலாம் பற்றிய குற்றச்சாட்டுக்களை அக்கட்சியின் மசூரா சபை மௌலவிமார் இது பற்றி குற்றஞ்சாட்டியவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை பகிரங்கமாக விசாரிக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் கூறியுள்ளதாவது,
உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் மிக அதிகமாக முஸ்லிம் காங்கிரசையே விமர்சித்தது. அக்கட்சித்தலைமை முஸ்லிம் சமூகத்தை பச்சையாக ஏமாற்றுகின்றது என்றும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை விற்று அனைவரும் சுக போகம் அனுபவிக்கிறார்கள் என்றும் பல தடவை குற்றம் சாட்டினோம். இப்போது அவை யாவும் அக்கட்சிக்காரர்களாலேயே உண்மைப்படுத்தப்படுவதால் மு. கா பற்றிய விமர்சனங்களை இறைவன் எம் மூலம் பேச வைத்துள்ளான் என்பதே உண்மை.
மது,மாது, கோடி என பல குற்றச்சாட்டுக்களை பசீர் சேகு தாவூத் முன்வைத்துள்ளார். இந்த நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சி தலைவருக்கும் இத்தகைய மோசமான முற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதில்லை. அத்தனை மோசமான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டும் மு. காவின் மசூரா சபையில் உள்ள மௌலவிமார் மௌனமாக இருப்பது கவலை தருவதாகும். அவர்களின் மசூரா என்ற ஆலோசனையை பெற்றுத்தான் தலைவர் இத்தகைய படு பாதக ங்களை செய்தாரா என்ற கேள்வி எழுகிறது.
பசீர் சேகு தாவூத் தலைவரை காட்டிக்கொடுத்து விட்டார் என சிலர் குற்றம் சாட்டுவதன் மூலம் மேலும் மேலும் தலைமையினதும் உயர் பீட உறுப்பினர்களினதும் சமூக விரோத செயல்களுக்கு துணை போகிறார்கள்.
கூட இருந்து குற்றம் செய்து விட்டு அதனை மறைக்கும் சமூகத்துரோகத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அந்த வகையில் இப்போதாவது ஞானம் பெற்று உண்மையை சொல்வதை உலமா கட்சி பாராட்டுகிறது.
அதே வேளை குற்றச்சாட்டை முன் வைத்த பசீரை பதவி நீக்கம் செய்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் மோசமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹக்கீமை இன்னமும் விசாரணைக்குட்படுத்தாமல் இருப்பது அவர்களின் சுயநலனை காட்டுகிறது. இப்படியான குற்றச்சாட்டுக்களுக்கு வெளிநாட்டு முஸ்லிமல்லாத கட்சித்தலைமகள் கூட ஆக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு விசாரணைக்கு முகம் கொடுப்பதையும் காண்கிறோம்.
ஆகவே பசீரால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் முதல் கடமை அக்கட்சியின் உயர் பீட மௌலவிமார்களுக்கு உண்டு என்பதை அவர்கள் உணர்வதுடன் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கத்துக்கு வந்தால் அவற்றை பகிரங்கமாக விசாரிப்பதே நபி வழி என்பதால் உடனடி விசாரணை செய்து சமூகத்தின் மானம் காக்க முன் வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.