மீண்டு வந்த கல்முனை மீனவர்களை நலம் விசாரித்த CEYLON MUSLIM

NEWS
மாலைதீவு கடற்படையால் மீட்கப்பட்ட கல்முனை மீனவர்கள் நேற்று நாடுதிரும்பினர்.

கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை கல்முனைக்கு வந்து சேர்ந்தனர்.

 6 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் படகை மீட்க தங்கியிருப்பதாகவும் மீதி ஐவரும் நாடுதிரும்பிருப்பதாகவும் அறியமுடிந்தது. நாடுதிரும்பிய மீனவர்களின் இல்லங்களுக்கு விஜயம் செய்த சிலோன் முஸ்லிம் பிரதம ஆசிரியர் மீனவர்களின் நலம் விசாரித்ததுடன் அவர்கள் பட்ட துயரை கேட்டறிந்தார்.

மீனவர் ஒருவருடன் பிரதம ஆசிரியர் பஹத் ஏ.மஜீத்

6/grid1/Political
To Top