முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தனது சிறுவயது முதல் தொண்டனாக பணியாற்றி வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம்தான் அம்பாறைக்கு வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவர் என்று புலனாய்வு அமைப்பான சி.ஆர்.டி (CRT) தகவல் வெளியிட்டுள்ளது.
தனது சொந்த விருப்பு வெறுப்புகளை தாண்டி சேகு பிழை செய்யும் போது அவரிடம் இருந்து பிரிந்து, அதாஉல்லாவுடன் இணைந்து அவர் சமூகத்திற்கு பிழை செய்யும் போது அவரை விட்டு விலகி, முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தினார். அதுவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சரை தேர்தல் காலங்களில் எதிர்ப்பது என்பது சுலபமான விடயம் அல்ல அந்த எதிர்ப்பை தாண்டி வெற்றி பெற்றார்.
கடந்த ஆட்சி மாற்றத்தில் மாகாண சபை அமைச்சுப்பதவி வழங்குவதாக ஒரு கதை அடிபட்டது, அதுவும் வழங்கப்படவில்லை, அந்தப் பதவி நசீர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அதிகாரமுள்ள தவம் பாராளுமன்ற உறுப்பினராக மாற்றியமைக்கப்பட்டால் அக்கரைப்பற்று, பொத்துவில், அட்டாளைச்சேனை, இறக்காமம் நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளை கைப்பற்ற முடியும் அதற்காக திட்டமிடவும் முடியும்.இதுதான் இன்றைய களநிலவர் என்று குறித்த புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதாஉல்லாவுக்கு மவுசு குறைந்துள்ள இந்த நிலையில் இன்னுமொரு அதிகாரத்தை மு.கா அமைக்குமானால் அது மாபெரும் வெற்றியினை தரும் என்றும் குறித்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.