Headlines
Loading...
தென்கிழக்கு பல்கலையின் மற்றுமொரு மைல்கல்; HIGH-TECH LAB திறக்கப்பட்டது

தென்கிழக்கு பல்கலையின் மற்றுமொரு மைல்கல்; HIGH-TECH LAB திறக்கப்பட்டது

எம்.வை.அமீர் 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 75 மாணவர்களுடன் கல்விநடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தில்,  2017-02-08  ஆம் திகதி அதிநவீன ஹைடெக் ஆய்வுகூடதொகுதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீமினால் திறந்துவைக்கப்பட்டது.
பீடாதிபதி கலாநிதி எம்.ஜி. முகம்மட் தாரீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.எல்.அப்துல் ஹலீம், பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.அனீஸ், நூலகர் எம்.எம்.றிபாவுடீன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வி.ஜி.என்.செவ்வந்தி, விரிவுரையாளர் எம்.ஜெ.அஹ்மட் சபானி, விரிவுரையாளர் திருமதி எம்.எம்.எப்.நஜா உள்ளிட்ட விரிவுரையாளர்களும் உபபதிவாளர் எம்.எப். முகம்மட் மர்சூக் ஆகியோரும் கல்விசாரா உத்தியோகத்தர்களும்  மாணவர்களும் பங்குகொண்டிருந்தனர்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பிரிவு மற்றும் உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவு என இரண்டு திணைக்களங்களைக் கொண்டு இயங்கும் தொழில்நுட்பவியல் பீடத்தில், திறந்து வைக்கப்பட்ட அதிநவீன ஹைடெக் ஆய்வுகூடதொகுதியில் மென்பொருளாக்க தொழில்நுட்பவியல் ஆய்வுகூடம், வலையமைப்பு மற்றும் கணணிப்பாதுகாப்பு முறைமையியல் தொடர்பான ஆய்வுகூடம் மற்றும் யுவிகியூட்டோஸ் ஆய்வுகூடம் என மூன்று ஆய்வுகூடங்கள் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இங்கு கருத்துத்தெரிவித்த உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காகவும் இங்கு கல்விபயிலும் மாணவர்களின் அதிஉச்ச அறிவை விருத்திசெய்யும் பொருட்டும் அதிக கருசணை செலுத்திவருவதாகவும் வசதிகளை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தில் 135000.00 ரூபாய் பொறுமதியான 75கணணிகளை போருத்தியுள்ளதாகவும் குறித்த ஆய்வுகூடத்துக்கு கிட்டத்தட்ட 13 மில்லியன் ரூபாய்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும் வைபை உள்ளிட்ட உயர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவைகளை மாணவர்கள் தங்களது உயர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்து என தெரிவித்த உபவேந்தர் நாஜீம், தனிப்பட்ட எவரதும் சொத்துக்கள் அல்ல என்றும் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை அதன் கௌரவத்தை உயர்த்தும் வகையில் பாவித்து மாணவர்களும் உயர்ச்சியடைவதேமேல் என்றும் தெரிவித்தார்.
பல்வேறுபட்ட உயர்வான வசதிகளை உருவாக்கித்தந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு வெளியே பேசப்படும் விதத்தைக் கொண்டே இங்கிருந்து பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களின் தரமும் நோக்கப்படும் என்று தெரிவித்த உபவேந்தர், இதுவிடயத்தில் மாணவர்கள் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
4 வருடங்களே இங்கு தங்களது கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலப்பகுதி இது என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு பட்டதாரியாக வெளியேறாது சிறந்த பட்டதாரியாக வெளியேறவேண்டும் என்பதே தனது அவா என்றும் தெரிவித்தார்.


தொழில்நுட்பவியல் பிரிவில் இணைந்துள்ள மாணவர்கள் எதிர்கால தொழில் சந்தையில் இலகுவாக தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்த உபவேந்தர், அவர்கள் அவர்களது தரத்தை அதிகரிப்பதனூடாக இன்னும் உயச்சியடையலாம் என்றும் எங்களது வரிப்பணத்தில் வழங்கப்படும் இவ்வாறான உயர் கல்விக்கும் வசதிக்கும் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ICT கல்வியானது மிகவும் பொறுமதியான கல்வி என்றும் சிறந்த முறையில் கற்று, மாணவர்கள் தொழில்நுட்பவியல் பீடத்தில் விரிவுரயாளர்களாகவும் இணைந்து பீடத்தின் வளர்ச்சிக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.