இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற மொபைல் புரோட்பான்ட் தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்குனரான HUTCH, மற்றுமொரு சேவையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அதன் மூலமாக தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் இத்தகைய ஒரு சேவையை முதன்முதலாக வழங்க முன்வந்துள்ளது.
HUTCH அறிமுகப்படுத்தியுள்ள ‘இணையத்தின் மூலமான சிம் அட்டை விண்ணப்பம் மற்றும் விநியோக’ சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது HUTCH சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தின் மூலமான மிக இலகுவான பதிவு நடைமுறையின் கீழ் விண்ணப்பித்து அவற்றை எவ்வித கட்டணங்களுமின்றி தமது வீடுகளுக்கே நேரடியாக தருவித்துக்கொள்ள முடியும்.
தற்போதைய காலகட்டத்தில் நுகர்வோரின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டும் அவர்கள் தமது அன்றாடத் தேவைகள் பலவற்றை தமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிகணினிகளை (லப்டொப்) மூலமாக இணையத்தினூடாக நிறைவேற்றிக்கொள்வது அதிகரித்துள்ளமையாலும் புதிய சிம் அட்டையொன்றை பெற்றுக்கொள்வதற்கு சிம் அட்டை விற்பனை மையம் ஒன்றுக்கு தாங்களே நேரடியாக செல்ல வேண்டிய தேவையை விடுத்து, இணைய வசதியை உபயோகித்து, மிகவும் சௌகரியமான வழியில், வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் இவ்வசதியை HUTCH நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக சலுகையாக, ஏராளமான விசேட வெகுமதித் திட்டங்களை HUTCH சிம் அட்டைகள் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். விநியோகம் இடம்பெறும் சமயத்தில் HUTCH சிம் அட்டை உடனடியாகவே தொழிற்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதனைப் பெற்றுக்கொண்ட உடனேயே பயன்படுத்த முடியும்.
தற்போது அறிமுகத் திட்டமாக HUTCH சிம் அட்டை விநியோக சேவையானது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் வழங்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பு மற்றும் தேவைகளின் அடிப்படையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இதனை விரைவில் விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகளை HUTCH பரிசீலனை செய்யவுள்ளது.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையத்தினூடான சிம் அட்டை விநியோக சேவை தொடர்பில் HUTCH ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்து வெளியிடுகையில்,
“எமது வாடிக்கையாளர்களுக்கு, சௌகரியமான, அதேசமயம் நியாயமான கட்டணங்களுடன் பொருத்தமான மொபைல் தீர்வுகளை வழங்கும் முயற்சிகளில் HUTCH தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் டிஜிட்டல் பயன்பாட்டுடனான வாழ்க்கைமுறை அதிகரித்துச் செல்லும் நிலையில், அவர்களின் சிரமங்களை இயன்றளவு போக்கி, அவர்கள் தமக்குத் தேவையான HUTCH சிம் அட்டையொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சௌகரியமான நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை உள்ளமையை HUTCH தெளிவாக விளங்கிக்கொண்டது. இந்த தனித்துவமான சேவையை, எவ்விதமான விளம்பரங்களுமின்றி, மிகவும் எளிமையான முறையில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் புதிய வாடிக்கையாளர்கள் உடனடியாகவே இச்சேவையின் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை எமக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றது.
எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தமது HUTCH சிம் அட்டையைக் கொள்வனவு செய்வதற்கு, அவர்களின் விருப்பத்திற்குரிய ஒரு தெரிவாக சௌகரியமான இச்சேவை மாறவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.