ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளராக இம்ரான் MP நியமனம்

NEWS




கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியை மீளவும்கட்டியெழுப்புவது தொடர்பான கூட்டமொன்று கட்சியின் செயலாளர் கபீர் காசிம் தலைமையில்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்றது 

இக்கூட்டத்தில் கிழக்குமாகான ஐக்கியதேசியக் கட்சி முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள்கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணதமிழ்,முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் இம்ரான் மஹரூப் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவேதிருகோணமலை மாவட்ட தவிசாளராகவும் முதூர், திருகோணமலை தொகுதிஅமைப்பாளராகவும் கடமையாற்றிவருகின்றார் என்பது குறுப்பிடத்தக்கது

அத்துடன் கிழக்குமாகாண மக்களின் பிரட்சினைகள் தொடர்பாக ஆராய சிறிகொத்தவில்அலுவலகம் ஒன்றை அமைத்து அவ்வலுவலகத்தின் ஊடாக கிழக்கு மக்களின்பிரட்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது
6/grid1/Political
To Top